உலககோப்பை அணியில் இடம்கிடைக்காததை அடுத்து யுஸ்வேந்திர சாஹல் எடுத்துள்ள அதிரடி முடிவு – விவரம் இதோ

Chahal
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகமான யுஸ்வேந்திர சாஹல் 72 போட்டியில் விளையாடி 121 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தும் அவரை உலகக்கோப்பை அணிகளில் தொடர்ச்சியாக இந்திய அணி புறக்கணித்து வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் உலக கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படாத பிறகு தற்போது சாஹல் ஒரு அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் வீரர்களான புஜாரா, ரகானே, பிரிதிவி ஷா என பல்வேறு வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி தங்களது திறனை நிரூபித்துள்ள வேளையில் தற்போது சாஹலும் இங்கிலாந்து சென்று கெண்ட் அணிக்காக விளையாட இருக்கிறார்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட கெண்ட் அணியின் நிர்வாகம் : சாஹல் எங்களது அணியுடன் இணைந்து விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளது. அதோடு இந்த தொடரின் கடைசி மூன்று போட்டிகளுக்கான அணியில் அவர் இடம் பெற்று விளையாடுவார் என்றும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அற்புதமான செயல்பாட்டை அவர் வெளிப்படுத்தி வந்தாலும் தொடர்ச்சியாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டது வருகிறார். இவ்வேளையில் தற்போது அவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அணியிலும் இடம் பெறாத நிலையில் அவர் கெண்ட் அனிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : IND vs PAK : இந்தியா பாகிஸ்தான் சூப்பர் 4 போட்டி குறித்து வெளியான பாசிட்டிவ் அப்டேட் – ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

இதுகுறித்து பேசி அவர் கூறுகையில் : இந்திய அணிக்காக உலகக் கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படாது வருத்தம் அளிக்கிறது இருந்தாலும் ஒரு கிரிக்கெட் வீரராக இது போன்ற முடிவுகளை நாம் ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். அந்த வகையில் நான் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாகும் வரை எனது உழைப்பை அளித்துக்கொண்டே இருப்பேன் என்றும் தற்போதைக்கு கவுண்டி கிரிக்கெட்டில் சவால் நிறைந்த இங்கிலாந்து மைதானத்தில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்த யோசனையில் இருந்து வருவதாகவும் சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement