IND vs PAK : இந்தியா பாகிஸ்தான் சூப்பர் 4 போட்டி குறித்து வெளியான பாசிட்டிவ் அப்டேட் – ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

IND-vs-PAK
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி துவங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 17-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி தற்போது சூப்பர் போஃர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில் தங்களது முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி அந்த போட்டியில் 266 ரன்கள் குவித்திருந்தது.

ஆனால் இரண்டாம் பாதி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் அந்த போட்டியில் இந்திய அணி ஒரு புள்ளியை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது தற்போது சூப்பர் போர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் சூப்பர் போஃர் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மீண்டும் மோத இருக்கும் இந்திய அணி செப்டம்பர் 10-ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பலபரீட்சை நடத்த இருக்கிறது.

இந்நிலையில் போட்டி நடைபெற இருக்கும் கொழும்பு மைதான வானிலை அறிக்கை வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே கண்டி நகரில் நடைபெற்ற சில போட்டிகள் மழை காரணமாக நடைபெறாமல் போன வேளையில் தற்போது அங்கிருந்து கொழும்பு நகருக்கு இந்தத் தொடரானது மாற்றப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இன்று வெளியான வானிலை அறிக்கையின் படி செப்டம்பர் 9-ஆம் தேதி வரை மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் போட்டி நாள் அன்று செப்டம்பர் 10-ஆம் தேதி பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் அப்படி பெய்தாலும் மிகவும் லேசான தூரலாகவே இருக்கும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நீங்க பழைய லெஜெண்ட் பிளேயரே இல்ல, ஷாஹீனுக்கு எதிரா இப்டியா திணறுவீங்க – இந்திய வீரர் மீது சோயப் அக்தர் ஏமாற்றம்

இதனால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பதால் இந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக மாறியுள்ளது. அதோடு இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கும் முன்னேறும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement