நீங்க பழைய லெஜெண்ட் பிளேயரே இல்ல, ஷாஹீனுக்கு எதிரா இப்டியா திணறுவீங்க – இந்திய வீரர் மீது சோயப் அக்தர் ஏமாற்றம்

Shoaib Akhtar 4
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து துவங்கிய சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை தன்னுடைய முதல் போட்டியில் தோற்கடித்த பாகிஸ்தான் அடுத்ததாக செப்டம்பர் 10ஆம் தேதி மீண்டும் பரம எதிரி இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற இத்தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் டாப் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா கடுமையாக போராடி 48.5 ஓவரில் 266 ரன்கள் சேர்த்தது.

குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக எதிர்பார்த்ததைப் போலவே திண்டாடி அவுட்டானதால் 66/4 என சரிந்த இந்தியாவை நல்லவேளையாக மிடில் ஆர்டரில் இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நங்கூரமாக நின்று ஓரளவு காப்பாற்றினார். இத்தனைக்கும் சாகின் அப்ரிடி மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று ஒரு வாரமாக முன்னாள் வீரர்கள் எச்சரித்தும் இந்தியாவின் 2 தூண்களான விராட் மற்றும் ரோகித் தடுமாறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

அக்தர் ஏமாற்றம்:
அதில் விராட் கோலியாவது 2021, 2022 டி20 உலக கோப்பைகளில் சாகினுக்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட்டு இப்போட்டியில் துரதிஷ்டவசமாக இன் சைட் எட்ஜ் முறையில் அவுட்டானார். ஆனால் அந்த 2 போட்டிகளிலுமே அவரிடம் சொதப்பிய ரோகித் சர்மா இப்போட்டியிலும் கொஞ்சம் கூட மாறாமல் க்ளீன் போல்ட்டாகி தாம் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதை மீண்டும் நிரூபித்தார்.

இந்நிலையில் இப்படி தடுமாற்றமாக பேட்டிங் செய்வது பழைய ரோஹித் சர்மாவே அல்ல என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் சோயப் அக்தர் அவரின் மனதில் சாகின் அப்ரிடி ஆழமாக அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது பழைய ரோகித் சர்மா அல்ல. ஏனெனில் தற்போது அவர் இரட்டை மனநிலையை கொண்டுள்ளார். குறிப்பாக சாகின் அப்ரிடி அவருடைய மனதை கைப்பற்றியுள்ளார்”

- Advertisement -

“பொதுவாக ரோகித் சர்மா தம்முடைய பேட்டிங் ஸ்டேன்ஸை மாற்றுவதை நான் பார்த்ததில்லை. ஆனால் தற்போது அதை மாற்றியுள்ள அவருக்கு என்ன ஆயிற்று? என்னை கேட்டால் அவர் தன்னுடைய ஸ்டேன்ஸை மாற்றியதாலேயே போல்டானார். மேலும் சாகின் அவருடைய மனதில் மிகவும் ஆழமாக இருக்கிறார். இது தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் மிகப்பெரிய அழுத்தம் வீரர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: தம்பி நீங்க பெர்குசன், நோர்ட்ஜேவ ஈஸியா அடிக்கலாம் ஆனா அவர தொட கூட முடியாது – இந்திய வீரரை எச்சரித்த சல்மான் பட்

அவர் கூறுவது போலவே சாகின் அப்ரிடியை எதிர்கொள்வதற்கு திணறும் ரோகித் சர்மா அதில் முன்னேறுவதற்காக பேட்டிங் செய்வதில் மாற்றத்தை ஏற்படுத்தியும் எந்த முன்னேற்றத்தையும் காணாமல் கிளீன் போல்டானார். ஆனாலும் ஷாஹீன் அப்ரிடி போன்ற பல பவுலர்களை தன்னுடைய கேரியரில் பார்த்து வெற்றிகரமாக செயல்பட்ட அவர் சற்று பதற்றமில்லாமல் தம்முடைய இயற்கையான ஸ்டைலில் அதிரடியாக விளையாடினாலே அழுத்தத்தை எதிரணி பவுலர்கள் மீது போட்டு மீண்டும் பழைய ஹிட்மேனாக அசத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement