தம்பி நீங்க பெர்குசன், நோர்ட்ஜேவ ஈஸியா அடிக்கலாம் ஆனா அவர தொட கூட முடியாது – இந்திய வீரரை எச்சரித்த சல்மான் பட்

Salman Butt 5
- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் வகையில் நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளன. அதிலும் தன்னுடைய முதல் சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அடுத்ததாக செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் மீண்டும் பரம எதிரி இந்தியாவை எதிர்கொள்கிறது.

அப்போட்டியில் இதே தொடரின் லீக் சுற்றில் பந்து வீச்சில் தெறிக்கவிட்ட அப்ரிடி, ரவூப் போன்ற பாகிஸ்தான் பவுலர்களுக்கு இம்முறையாவது இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் எதிர்பார்த்தது போலவே சாகின் அப்ரடியின் ஸ்விங் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் நின்ற இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷாகின் அப்ரிடி ஏற்படுத்திய அழுத்தத்தில் ஹரிஷ் ரவூப் வேகத்தில் க்ளீன் போல்ட்டானார். இத்தனைக்கும் ரோஹித் மற்றும் விராட் கோலியை விட இந்த வருடம் ஆரம்பம் முதலே ஐபிஎல் மட்டுமின்றி சர்வதேச அளவில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்து அசத்திய அவர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து ஆசிய கோப்பையிலும் தடுமாறுவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

இந்நிலையில் ஷாஹீன் அப்ரிடியை விட அதிவேகத்தில் வீசக்கூடிய லாக்கி பெர்குசன், அன்றிச் நோர்ட்ஜெ ஆகியோரை ஐபிஎல் தொடரில் அசால்டாக எதிர்கொண்ட சுப்மன் கில் பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொள்வது கடினம் என்று சல்மான் பட் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக மிகவும் தாமதமாக பந்தை ஸ்விங் செய்யக்கூடிய அப்ரிடியை அடிப்பது மிகவும் கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் இதே வேகத்தில் அன்றிச் நோர்ட்ஜேவை எதிர்கொண்டுள்ளார். அதே போல ரபாடா போன்ற இதர வேகப்பந்து வீச்சாளர்களையும் அவர் சிறப்பாக எதிர்கொண்டுள்ளார். இருப்பினும் சாகினுக்கு எதிராக அவர் வேகத்தால் மட்டும் தடுமாறவில்லை. மாறாக நல்ல லைன், லென்த், ஸ்விங் ஆகியவற்றுடன் துல்லியமான வேகம் இருப்பதாலேயே தடுமாறுகிறார். சொல்லப்போனால் இதே சுப்மன் கில் அசால்ட்டாக அன்றிச் நோர்ட்ஜெவை எதிர்கொண்டுள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் தம்முடைய இரட்டை சதத்தை அடிக்கும் போது அவர் லாக்கி பெர்குசனையும் நன்றாகவே எதிர்கொண்டார்”

இதையும் படிங்க: சச்சினுக்கு ஒரு ஸ்கெட்ச், விராட் கோலிக்கு ஒரு ஸ்கெட்ச். அவர்களை இப்படித்தான் வீழ்த்துவேன் – ஆண்டர்சன் பேட்டி

“அந்த வகையில் ஷாஹீனை விட அதிவேகத்தில் வீசக்கூடிய பவுலர்களுக்கு எதிராக அவர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் புதிய பந்தில் தாமதமாக ஸ்விங் செய்வதே ஷாஹீனை பொறுத்த வரை பெரிய விஷயமாக இருக்கிறது. அது பொதுவாக அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடிக்கும். குறிப்பாக கில் புதியவராக இருக்கும் நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி டேவிட் வார்னர் போன்ற அனுபவமிக்கவர்களும் சாகினுக்கு எதிராக அவுட்டாகியுள்ளார்கள்” என்று கூறினார்.

Advertisement