சச்சினுக்கு ஒரு ஸ்கெட்ச், விராட் கோலிக்கு ஒரு ஸ்கெட்ச். அவர்களை இப்படித்தான் வீழ்த்துவேன் – ஆண்டர்சன் பேட்டி

James-Anderson
- Advertisement -

இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 41 வயதான முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த 2003-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி இதுவரை 183 போட்டிகளில் பங்கேற்று 690 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது வரை ஆக்டிவாக இருக்கும் ஆண்டர்சன் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற இருவரையும் பலமுறை ஆட்டமிழக்க செய்த பவுலர்களில் ஒருவராக பார்க்கப்படும் ஆண்டர்சன் அடுத்ததாக அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் விளையாட காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டூவர்ட் பிராடுடன் நடைபெற்ற ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ஆண்டர்சன் கூறுகையில் : சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலிக்கு எதிராக தனித்தனியே திட்டம் வகுத்து அவர்களை வீழ்த்தியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

விராட் கோலிக்கு எதிராக நான் எப்பொழுது பந்து வீசினாலும் ஆஃப் ஸ்டம்பிற்கு சற்று தள்ளியே பந்துவீசுவேன் அவ்வாறு வீசும்போது அவர் எட்ஜ்ஜாகி ஆட்டம் இழப்பார். அதேபோன்று சச்சின் டெண்டுல்கரை ஆட்டமிழக்க வைக்க வேண்டும் என்றால் கால் பகுதியில் பந்துவீசி அவரை எல்.பி முறையில் வீழ்த்த விரும்புவேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுவரை ஆண்டர்சன் சச்சின் டெண்டுல்கரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒன்பது முறையும், ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று விராட் கோலியை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழு முறையும், ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறையும் ஆட்டமிழக்க வைத்துள்ளார்.

இதையும் படிங்க : இந்த உலககோப்பையோட ராகுல் டிராவிடின் கதையும் முடியுதா? – பி.சி.சி.ஐ கையிலெடுத்துள்ள முடிவு

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : பாகிஸ்தான அணியின் கேப்டனான பாபர் அசாமை வீழ்த்தும் பந்து குறித்து பேசுகையில் : எப்போதுமே பாபர் அசாம் நிற்கும்போது ஆஃப் பெயில்ஸை அடித்து போல்ட் எடுக்கவே விரும்புவதாகவும் கூறியுள்ளார். அண்மையில் 37 வயதான ஸ்டுவர்ட் பிராட் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் 41 வயதிலும் ஆண்டர்சன் தொடர்ச்சியாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement