இந்த உலககோப்பையோட ராகுல் டிராவிடின் கதையும் முடியுதா? – பி.சி.சி.ஐ கையிலெடுத்துள்ள முடிவு

Dravid
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பதவியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து விராட் கோலியும் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறவே இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவும், புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிடும் பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வரும் ராகுல் டிராவிடின் கான்ட்டிராக்ட் வருகிற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரோடு முடிவுக்கு வருகிறது. டிராவிடின் தலைமையில் இந்திய அணி கலவையான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.

- Advertisement -

எனவே இந்த உலகக்கோப்பை தொடர் முடிந்து இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. ஆனால் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ராகுல் டிராவிட் நினைக்கும் வரை அவர் பயிற்சியாளராக செயல்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை இந்திய அணி இந்த தொடரையும் தவறவிட்டால் பயிற்சியாளர் மாற்றம் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்திய அணியில் மேலும் ஒரு மாற்றமாக உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஒயிட் பாலுக்கு ஒரு பயிற்சியாளரும், ரெட் பாலிற்கு ஒரு பயிற்சியாளரும் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ தரப்பிலிருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இங்கிலாந்து அணி இரண்டு பயிற்சியாளர்களை நியமித்து செயல்பட்டு வரும் வேளையில் தற்போது இந்திய அணியும் அந்த முறையை கையில் எடுக்க இருக்கிறது. இருப்பினும் டிராவிட் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்துள்ளதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயிற்சியாளராக நீடிக்க அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : 8 ஆண்டுகள் காத்திருப்பு.. ஐ.பி.எல் தொடருக்கு ஓகே சொல்லி மிட்சல் ஸ்டார்க் – வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

அதேவேளையில் ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை பயிற்சியாளர் மாற்றம் அவசியமானால் ஆஷிஷ் நெஹ்ரா புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி அவரது தலைமையில் தான் அறிமுக ஆண்டிலேயே கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement