8 ஆண்டுகள் காத்திருப்பு.. ஐ.பி.எல் தொடருக்கு ஓகே சொல்லி மிட்சல் ஸ்டார்க் – வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Mitchell-Starc
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் கடந்த 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் ஆர்.சி.பி அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தார். இதுவரை ஐபிஎல் தொடரில் 27 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் இவருக்கு ஐபிஎல் மவுசு அதிகம் இருந்தும் தனது தாய் நாட்டிற்காக நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதற்காக ஐபிஎல் தொடரிலும், டி20 போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்து மிட்சல் ஸ்டார்க் அதிரடி அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதன்படி அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாட்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்கப்போவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் விளையாட தயாராக இருக்கிறேன்.

அடுத்த ஆண்டு நிச்சயமாக நான் ஐபிஎல் தொடரில் என்னுடைய பெயரை ஏலத்தில் இணைத்து கண்டிப்பாக ஏதாவது ஒரு அணிக்காக விளையாடுவேன். எனக்கு அப்படி எனக்கு ஏதாவது ஒரு அணி வாய்ப்பினை வழங்கும் பட்சத்தில் அந்த அணிக்காக சிறப்பான பங்களிப்பினை வழங்கி டி20 உலக கோப்பை தொடருக்காக தயாராக இருக்கிறேன்.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த ஐ.பி.எல் தொடர் எனக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்பதனாலே என் பெயரை அடுத்த ஆண்டு ஏலத்தில் நான் பதிவு செய்ய உள்ளேன் என்று மிட்சல் ஸ்டார்க் கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரிலும் தனது பெயரை பதிவு செய்திருந்த மிட்சல் ஸ்டார்க் கொல்கத்தா அணிக்காக 9.4 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டாலும் காயம் காரணமாக அந்த தொடர் முழுவதுமே விளையாடவில்லை.

இதையும் படிங்க : கவலைப்படாதீங்க கடந்த 12 வருசமா என்ன நடந்துச்சுன்னு பாருங்க – இந்தியாவின் 2023 உ.கோ வெற்றி பற்றி யுவிக்கு தெம்பை ஊட்டிய சேவாக்

இந்நிலையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் அவர் விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று ஐ.பி.எல் தொடரினை போன்றே சர்வதேச கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த விரும்புவதாகவும் மிட்சல் ஸ்டார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement