கவலைப்படாதீங்க கடந்த 12 வருசமா என்ன நடந்துச்சுன்னு பாருங்க – இந்தியாவின் 2023 உ.கோ வெற்றி பற்றி யுவிக்கு தெம்பை ஊட்டிய சேவாக்

Sehwag Yuvraj Singh
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலக கோப்பை கிரிக்கெட் வரும் அக்டோபர் 5 முதல் அகமதாபாத் நகரில் துவங்கி நவம்பர் 19 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாலமாக நடைபெற உள்ளது. 1987, 1996, 2011 ஆகிய வருடங்களில் அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா முதல் முறையாக இத்தொடரை முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடத்துவது ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது.

அதில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா போன்ற எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான திகழும் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சொல்லப்போனால் 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் பெரும்பாலும் நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறி வரும் இந்தியா அந்த மோசமான தொடர் தோல்விகளுக்கு இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல மேஜிக் நிகழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உச்சகட்டமாக காணப்படுகிறது.

- Advertisement -

சேவாக்கின் தெம்பு:
ஏனெனில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் கில்லியாக செயல்பட்டு வரும் இந்தியா கடந்த 10 வருடங்களில் பெரும்பாலும் வெற்றிகளை மட்டுமே பெற்று எதிரணிகளால் சுலபமாக அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. ஆனாலும் முக்கிய போட்டிகளில் சொதப்புவதில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக புதிய ஸ்விங் பந்துகளில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திண்டாடுவதிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தான் போட்டிகள் நிரூபித்தன.

அதே போல ஃபீல்டிங்கில் அல்வா கேட்ச்களை கோட்டை விடுவதில் மாற்றம் ஏற்படவில்லை என்பதை சமீபத்திய நேபாள் போட்டி காண்பித்தது. மேலும் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து நேரடியாக களமிறங்குவதால் மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கிறது. அது போக பவுலிங் துறையும் நெருப்பாக இல்லை என்பதை கத்துக்குட்டி நேபாள் கடந்த சில தினங்களுக்கு முன் 230 ரன்களை அடித்து காண்பித்தது.

- Advertisement -

இந்நிலையில் “நாம் அனைவரும் 2011 உலகக்கோப்பை வெற்றியை இம்முறையும் திரும்ப செய்ய விரும்புகிறோம். ஆனால் 2011 அணி அழுத்தமான சமயத்தில் மின்னியது. அதே போல 2023இல் தற்போதைய அணி அழுத்தமான சூழ்நிலையில் இருக்கிறது. எனவே அதே மேஜிக்கை மீண்டும் செய்ய நம்மிடம் நேரம் இருக்கிறதா? குறிப்பாக அழுத்தத்தை பயன்படுத்தி நம்மால் போட்டியை மாற்ற முடியுமா” என ட்விட்டரில் யுவராஜ் சிங் ட்விட்டரில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:  உலககோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமனம் – எதற்கு தெரியுமா?

அதற்கு 2011இல் இந்தியா, 2015இல் ஆஸ்திரேலியா, 2019இல் இங்கிலாந்து என கடந்த 12 வருடங்களில் உலகக் கோப்பையை சொந்த மண்ணில் நடத்திய நாடுகள் வெற்றி வாகை சூடியதால் கவலைப்படாதீர்கள் என்று பதிலளித்து வீரேந்திர சேவாக் தெம்பை ஊட்டியுள்ளார். குறிப்பாக இம்முறை நாம் சாம்பியனை போல் விளையாடி அழுத்தத்திற்கு அஞ்சாமல் அதை எதிரணிக்கு கொடுத்து கோப்பையை வெல்வோம் என்று அவருக்கு சேவாக் பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது.

Advertisement