இதுல பாண்டியா மேல என்ன தப்புன்னு சொல்லுங்க? விமர்சிக்கும் ரசிகர்கள் அதை புரிஞ்சுக்கனும்.. கங்குலி கருத்து

Sourav Ganguly
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடர் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. அதில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய முதல் மூன்று போட்டிகளிலும் மூன்று தோல்விகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது. குறிப்பாக இந்த வருடம் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.

அதற்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் உச்சகட்ட எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதற்கேற்றார் போல் முதல் போட்டியிலேயே சீனியர் என்றும் பாராமல் ரோகித் சர்மாவை புவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு ஹர்திக் பாண்டியா வற்புறுத்தினார். அதனால் கோபமடைந்த மும்பை ரசிகர்கள் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தங்களுடைய சொந்த கேப்டன் என்றும் பாராமல் பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

- Advertisement -

கங்குலி கருத்து:
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தான் ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளதாக ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். எனவே ரசிகர்கள் இந்தளவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு பாண்டியா எதையும் தவறாக செய்யவில்லை என கங்குலி கூறியுள்ளார். இது பற்றி மும்பை – டெல்லி அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு.

“ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. அது சரியல்ல. ஏனெனில் அணி நிர்வாகம் அவரை கேப்டனாக நியமித்துள்ளது. அது தான் விளையாட்டாகும். நீங்கள் இந்தியாவின் கேப்டனாக அல்லது மாநில அணியின் கேப்டனாக அல்லது ஐபிஎல் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுகிறீர்கள். அந்த வகையில் பாண்டியா மும்பை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்”

- Advertisement -

“அதே சமயம் ரோஹித் சர்மா வித்தியாசமான கிளாஸ் நிறைந்தவர். ஒரு வீரராகவும் கேப்டனாகவும் அவர் மும்பை அணிக்கும் இந்திய அணிக்கும் வெளிப்படுத்திய செயல்பாடுகள் வித்தியாசமானது. ஆனாலும் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஹர்திக் பாண்டியாவின் தவறல்ல. அதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார். இதற்கிடையே ஹர்திக் பாண்டியா, பும்ரா, மலிங்கா ஆகியோருக்கு இடையே விரிசல் என்றும் செய்திகள் வெளி வந்தன.

இதையும் படிங்க: 20 ஓவர்ஸ் போடுறது கஷ்டம்.. 21 வயசு திறமையான மயங் யாதவை அதுக்குள்ள தள்ளி வீணச்சுடாதீங்க.. எச்சரித்த வாட்சன்

அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்கள் பேசிக் கொள்ளாமல் சென்ற வீடியோக்களும் வைரலாகின. இந்த நிலையில் ஏப்ரல் ஏழாம் தேதி மும்பை தன்னுடைய அடுத்த போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது. அதில் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்துள்ள மும்பைக்கு முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஹர்திக் பாண்டியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement