20 ஓவர்ஸ் போடுறது கஷ்டம்.. 21 வயசு திறமையான மயங் யாதவை அதுக்குள்ள தள்ளி வீணச்சுடாதீங்க.. எச்சரித்த வாட்சன்

Shane Watson 3
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 தொடரில் மயங் யாதவ் சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுகளை பெற்று வருகிறார். 21 வயது மட்டுமே நிரம்பிய அவர் லக்னோ அணிக்காக இந்த வருடம் அறிமுகமாகி 145 – 155 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.

அதனால் வரலாற்றிலேயே தனது முதலிரண்டு ஐபிஎல் போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் வீரர் என்ற மாபெரும் சரித்திரம் படைத்த அவர் நடப்பு சீசனில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அத்துடன் சரியான லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி துல்லியமாக வீசுவதால் அவரை 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

- Advertisement -

வாட்சன் கருத்து:
அத்துடன் வேகத்துக்கு சாதகமான மைதானங்களை கொண்ட ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் ஆரம்பத்திலேயே மயங் யாதவை கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தி வீணடித்து விட வேண்டாம் என்று ஷேன் வாட்சன் கூறியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

“கண்டிப்பாக தற்போது மயங் யாதவ் அதிகமாக பேசப்படுபவராக இருக்கிறார். அவரிடம் உலகத்தரம் வாய்ந்த வேகம் மற்றும் திறன் இருக்கிறது. அவரைக் கொண்டுள்ளதற்கு லக்னோ அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு அவர் சவாலை கொடுப்பது மிகவும் ஸ்பெஷலாகும். அதனால் நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடுவதை பார்க்க விரும்புகிறீர்கள்”

- Advertisement -

“ஆனால் ஃபிளாட்டான பிட்ச்சில் ஒருநாளில் 15 முதல் 20 ஓவர்கள் முழு வேகத்துடன் வீச வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது வேகப்பந்து வீச்சாளராக உங்களுக்கு மிகப்பெரிய பாரம் ஏற்படும். எனவே அவரை அதற்குள் தள்ளுவதை நான் சரியானதாக பார்க்கவில்லை. அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைக்க முயற்சிப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு வீணான செயல் என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்”

இதையும் படிங்க: நன்றி சொன்ன அபிஷேக் சர்மா.. அடிப்பதற்கு செருப்பு, குச்சியுடம் வித்யாசமாக பதிலளித்த யுவராஜ் சிங்

“ஏனெனில் அவரால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய மதிப்பை கொடுக்க முடியும். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அவரைப் போன்ற இளம் வீரரை உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தள்ளலாம் என்று பேசுவதை நான் பார்த்துள்ளேன். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுவது அவருடைய உடலில் நல்ல முதிர்ச்சியை ஏற்படுத்தும். எனவே அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதை மட்டுமே நான் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement