IPL 2023 : 25 வருஷத்துக்கு முன்னாடி அடிச்ச முதல் ரன் மாதிரி இருந்துச்சு – டெல்லி அணியை கலாய்த்த கங்குலி, காரணம் இதோ

Sourav Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் 15 வருடங்களாக வெல்ல முடியாமல் தவித்து வரும் முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய டெல்லிக்கு ரிஷப் பண்ட் காயத்தால் வெளியேறிய நிலையில் 2016 கோப்பையை வென்று அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரராக சாதனை படைத்துள்ள அனுபவம் கொண்ட டேவிட் வார்னர் தலைமை தாங்கினார். ஆனால் அவரது தலைமையில் 2013க்குப்பின் 10 வருடங்கள் கழித்து முதல் 5 போட்டிகளில் 5 தொடர் தோல்விகளை சந்தித்த டெல்லி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை ஆரம்பத்திலேயே 50% பறிகொடுத்த நிலைமைக்கு தள்ளப்பட்டது.

அதனால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள ஏப்ரல் 20ஆம் தேதி தங்களுக்கு சொந்த ஊரான டெல்லியில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அந்த அணி 4 விக்கெட் வித்யாசத்தில் வென்று ஒரு வழியாக முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதியடைந்தது. மழையால் இரவு 8.30 மணிக்கு தாமதமாக துவங்கிய அந்த போட்டியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததை பயன்படுத்திய டெல்லி பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு கொல்கத்தாவை 20 ஓவரில் 127 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர்.

- Advertisement -

கலாய்த்த கங்குலி:
அதிகபட்சமாக ஜேசன் ராய் 43 (39) ரன்களும் ஆண்ட்ரே ரசல் 38* (31) ரன்களும் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், அன்றிச் நோர்ட்ஜெ, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆனால் 128 ரன்களை துரத்தும் போது மீண்டும் பிரிதிவி ஷா 13, மிட்சேல் மார்ஷ் 2, பில் சால்ட் 5 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் ஆரம்பத்தில் டேவிட் வார்னர் அதிரடியாக 57 (41) ரன்கள் எடுத்த காரணத்தாலும் இலக்கு குறைவாக இருந்த காரணத்தாலும் கடைசியில் அக்சர் படேல் 19* (22) ரன்கள் எடுத்ததால் கடைசி ஓவரில் டெல்லி போராடி வென்றது.

ஆனாலும் வெறும் 128 ரன்களை துரத்துவதற்கு கடைசி ஓவர் வரை திணறிய டெல்லியை நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள். அதே போல எளிதான வெற்றியை போராடி வென்ற டெல்லியை பார்த்து கடுப்பான அதன் இயக்குனர் மற்றும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி இந்த வெற்றி 1996இல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்காக அறிமுகமாகி முதல் ரன்னை எடுத்த போது ஏற்படுத்திய பரபரப்பை கொடுத்ததாக கலாய்க்கும் வகையில் பாராட்டினார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதல் வெற்றியை பதிவு செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக 25 வருடங்களுக்கு முன்பாக என்னுடைய முதல் டெஸ்ட் ரன்னை எடுத்த போது இருந்த பரபரப்பை நினைத்துக் கொண்டே பெவிலியினில் அமர்ந்து இந்த போட்டியை பார்த்தேன். இப்போட்டியில் நாங்கள் அதிர்ஷ்டத்தின் பக்கம் இருந்தோம் என்று நினைக்கிறேன். இந்த தொடரில் இதற்கு முன்பும் நாங்கள் பந்து வீச்சில் அசத்தலாகவே செயல்பட்டோம். குறிப்பாக பெங்களூருவை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது போல மும்பைக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டோம். எனவே எங்களுடைய பவுலிங் சிறப்பாக இருக்கிறது”

“ஆனால் பிரச்சனை பேட்டிங்கில் தான் இருக்கிறது. எனவே இதிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு எவ்வாறு நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யலாம் என்பதை முயற்சிக்க வேண்டும். ஏனெனில் எங்களுடைய ஸ்பின்னர்க்களும் வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இருப்பினும் பேட்டிங்கில் நாங்கள் அனுபவமற்ற வீரர்களை கொண்டிருக்கிறோம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் சிறப்பாக விளையாடவில்லை. பிரிதிவி ஷா, மனிஷ் பாண்டே என யாராக இருந்தாலும் பேட்டிங்கில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும்” என்று தங்களுடைய அணியின் பேட்ஸ்மேன்களை விமர்சித்து பேசினார்.

இதையும் படிங்க:தோனி, கோலி, ரோஹித் ஆகியோரது டிவிட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம் – காரணம் என்ன தெரியுமா?

முன்னாதாக என்னதான் ஜாம்பவான் கேப்டன்களாக இருந்தாலும் கங்குலி, பாண்டிங் ஆகியோர் டெல்லியில் ஜீரோ இம்பேக்ட் ஏற்படுத்துவதாக முன்னாள் வீரர் சேவாக் கடுமையாக விமர்சித்தார். அந்த நிலையில் இந்த வெற்றி அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாகவும் உத்வேகமாகவும் அமையும் என்றால் மிகையாகாது.

Advertisement