தோனி, கோலி, ரோஹித் ஆகியோரது டிவிட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம் – காரணம் என்ன தெரியுமா?

Twitter
- Advertisement -

உலகெங்கிலும் உள்ள சமூக வலைதளங்களில் முக்கிய பக்கமாக பார்க்கப்படும் ட்விட்டர் அக்கவுண்ட்களிலும் பல்வேறு பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்தியா மட்டும் இன்றி உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் ட்விட்டர் கணக்கினை வைத்துள்ளனர். அதன் மூலம் அவர்கள் தங்களது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள், ஆதரவாளர்கள் என அனைவருக்கும் அவ்வப்போது சில செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவிலும் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டர் கணக்கில் பல்வேறு பிரபலங்களும் தங்களது அக்கவுண்ட்களை வைத்துள்ளனர். அப்படி பிரபலங்களாக இருக்கும் பலருக்கும் ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை வழங்கியுள்ளது.

- Advertisement -

அப்படி ப்ளூ டிக் வைத்திருக்கும் அக்கவுண்டுகள் பிரபலங்களின் உடையது என்பதை அந்த குறியீடு தனித்துவமாக காட்டும். அந்த வகையில் இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்கள் ப்ளூ டிக் வைத்திருக்கும் வேளையில் தற்போது திடீரென இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியது twitter அக்கவுண்டுகளில் உள்ள ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்களும் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் இந்தியாவைச் சேர்ந்த பயனர்கள் ப்ளூ டிக் வைத்திருந்தால் மாதம் தோறும் 900 ரூபாய் சந்தா செலுத்த வேண்டும் என்று அறிவித்திருந்தார்.

- Advertisement -

அதுவும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் சந்தா கட்டணத்தை செலுத்தி விட வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் யாருடைய அக்கவுண்டாக இருந்தாலும் ப்ளூ டிக் நீக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க : வெற்றிகரமாக முடிந்த அறுவைசிகிச்சை. ஷ்ரேயாஸ் ஐயரிடம் இருந்து வந்த நற்செய்தி – ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்நிலையில் அப்படி 900 ரூபாய் மாத சந்தா செலுத்த தவறிய கிரிக்கெட் வீரர்களான தோனி, விராட் கோலி, ரோஹித் ஆகியோரது ட்விட்டர் கணக்கில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டதோடு இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்களின் ப்ளூ டிக்கையும் அவர்கள் நீக்கி அதிரடி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement