விராட் கோலியை தூக்கிட்டு ரோஹித்தை டெஸ்ட் கேப்டனாக நியமித்தது ஏன்? பின்னணியை பகிர்ந்து சௌரவ் கங்குலி

Ganguly
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதனால் 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் மண்ணை கவ்விய இந்தியா வெறும் கையுடன் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. குறிப்பாக தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் பேட்டிங், பவுலிங் துறைகளில் கொஞ்சமும் போராடாமல் மோசமாக தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மற்றும் முக்கிய முடிவுகள் அனைத்துமே சொதப்பலாக அமைந்தது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

TEam India

- Advertisement -

ஏனெனில் இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் ஓவல் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும் ஏற்கனவே அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி உலக சாதனை படைத்து நம்பர் ஒன் பவுலராக இருப்பதாலும் அஸ்வினை தேர்ந்தெடுக்குமாறு சச்சின் உட்பட அனைவரும் கேட்டுக் கொண்டும் அதை ரோகித் சர்மா ஏற்கவில்லை. மேலும் டாஸ் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்த தவறிய அவர் மாபெரும் ஃபைனலில் கேப்டனாக முன்னின்று ஒரு அரை சதம் கூட அடிக்காமல் பேட்டிங்கில் சொதப்பியது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

கங்குலி விளக்கம்:
முன்னதாக 2014ஆம் ஆண்டு தரவரிசையில் 7வது இடத்தில் திணறிய இந்தியாவை 2016 – 2021 வரை தனது ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் கோலி கடந்த ஃபைனல் உட்பட உலக கோப்பையை வெல்லாததால் விமர்சனங்களை சந்தித்தார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த அவர் 2021 டி20 உலக கோப்பையுடன் டி20 கேப்டன்ஷிப் பதவி ராஜினாமா செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்வதாக அறிவித்தார்.

ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்று கருதிய அப்போதைய சௌரவ் கங்குலி தலைமையிலான பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு அவருடைய ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்தும் மனமுடைந்த விராட் கோலி பணிச்சுமை காரணமாக காட்டி டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியையும் ராஜினாமா செய்தார். மறுபுறம் கடந்த 2022 ஜனவரியிலேயே டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேச தொடர்களில் காயத்தால் வெளியேறின நிலையில் இந்த ஃபைனலில் தான் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் கேப்டன்ஷிப் செய்தார்.

- Advertisement -

அப்படி அனுபமில்லாத காரணத்தால் வெளிநாட்டு மண்ணில் முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்த அவர் இப்படி சொதப்பியத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் விராட் கோலி திடீரென டெஸ்ட் கேப்டனாக பதவி விலகியதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவிக்கும் சௌரவ் கங்குலி ஐபிஎல் மற்றும் ஆசிய கோப்பை வென்ற அனுபவம் நிறைந்த காரணத்தால் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்ததாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Ganguly

“விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து திடீரென விலகிய போது பிசிசிஐ அந்த நிலைமையை சமாளிக்க தயாராக இல்லை. அது தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்துக்கு பின் நாங்கள் எதிர்பாரா ஒன்றாக அமைந்தது. மேலும் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ஏன் ராஜினாமா செய்தார் என்பதை விராட் கோலி தான் சொல்ல வேண்டும். எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. இருப்பினும் தற்போது அதைப்பற்றி பேசி பயனில்லை. ஏனெனில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்து விட்டார்”

இதையும் படிங்க:பாவம் அவர இவ்ளோ கேவலமா ட்ரீட் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல – ரோஹித், டிராவிட்டை விளாசிய கவாஸ்கர்

“மேலும் அந்த நிலையில் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் தேர்வுக்குழு இருந்தது. அப்போது 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று ஆசிய கோப்பையையும் வென்ற அனுபவத்தைக் கொண்டிருந்த ரோகித் சர்மா சரியானவராக இருந்ததால் கேப்டனாக நியமிக்கப்பட்டார்” என்று கூறினார்.

Advertisement