பிளமிங்கை வீழ்த்தி பிரேவிஸை பறித்த தாதா.. வரலாறு காணாத தொகைக்கு வாங்கியது ஏன்? கங்குலி பேட்டி

Dewald Brevis
- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் எஸ்ஏ20 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அதில் 2026 சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்ஸ்பர்க் உள்ள நகரில் நடைபெற்றது. அந்த ஏலத்தில் 22 வயதாகும் இளம் தென்னாப்பிரிக்க வீரர் தேவால்ட் ப்ரேவிஸை வாங்குவதற்கு ஜேஎஸ்கே மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.

ஏனெனில் 2022 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த அவரை ஐபிஎல் தொடரில் மும்பை அணி வாங்கியது. இருப்பினும் அங்கே பெரிய ரன்கள் அடிக்கத் தவறிய அவரை மும்பை கழற்றி விட்டது. கடந்த ஐபிஎல் மெகா ஏலத்திலும் அவரை யாரும் வாங்கவில்லை. ஆனால் சிஎஸ்கே அணி காயமடைந்த குர்ஜப்நீத் சிங்கிற்கு பதிலாக அவரை வாங்கியது.

- Advertisement -

வரலாறு காணாத தொகை:

அந்த வாய்ப்பில் கடைசிக்கட்ட போட்டிகளில் அமர்க்களமாக விளையாடிய ப்ரேவிஸ் சிஎஸ்கே அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தினார். அத்துடன் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 போட்டியில் 125* (56) ரன்கள் அடித்த அவர் தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு உதவினார். அந்த வகையில் வருங்கால சூப்பர்ஸ்டார் பேட்ஸ்மேனாக கருதப்படும் அவரை எஸ்ஏ தொடரிலும் சிஎஸ்கே கிளை அணியான ஜேஎஸ்கே வாங்குவதற்கு போட்டியிட்டது.

குறிப்பாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தென்னாபிரிக்காவிலும் அவரை வாங்க போட்டியிட்டார். ஆனால் அவருக்கு போட்டியாக பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் மற்றும் இந்திய ஜாம்பவான் சௌரவ் கங்குலி ஏலம் கேட்டார். ஒரு கட்டத்தில் ஏலம் உச்சபட்ச விலைக்கு சென்றதால் கேப்பிட்டல்ஸ் நிர்வாகிகள் யோசித்தனர்.

- Advertisement -

காரணம் என்ன:

இருப்பினும் சற்று யோசிக்காத கங்குலி 16.5 மில்லியன் ரண்ட்டுக்கு (8.31 கோடிகள்) ப்ரேவிஸை வாங்க கையைத் தூக்கினார். அப்போது பிளமிங் மேற்கொண்டு ஏலம் கேட்கவில்லை என்று பின்வாங்கினார். அதனால் எஸ்ஏ தொடரில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற சாதனையை ப்ரேவிஸ் படைத்தார். அந்த வகையில் பிளமிங் மற்றும் ஜேஎஸ்கே அணியிடமிருந்து அவரை கங்குலி பறித்தார் என்றே சொல்லலாம்.

தென்னாப்பிரிக்க தொடரில் ப்ரேவிஸை வரலாறு காணாத தொகைக்கு வாங்கியது பற்றி கங்குலி பேசியது பின்வருமாறு. “ப்ரேவிஸ் அசத்துவார் என்று நான் நம்புகிறேன். அற்புதமான திறமைக் கொண்ட அவர் கடந்த ஒன்றரை வருடங்களில் முன்னேறியதை ஆஸ்திரேலியாவில் பார்த்தோம். அந்த சுற்றுப்பயணத்தில் அவர் கேம் சேஞ்சர் என்பதைக் காட்டினார்”

இதையும் படிங்க: சுயநலமற்ற ரோஹித்துக்கு ஆல் டைம் கிரேட் இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடமில்லை.. காரணம் இதான்.. மஞ்ரேக்கர்

“அதுவே டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற உங்களுக்கு தேவை. எங்களிடம் இருக்கும் ரசல், ரூதர்போர்ட் போல அவரும் அசத்துவார் என்று நம்புகிறேன். நான் எப்போதும் பணத்தை செயல்பாடுகளுடன் பொருத்துவதில்லை. எனவே 16.5 மில்லியனைத் தாண்டி அவரின் திறமையை நான் நம்புகிறேன். ஸ்பின்னர்களை நன்றாக விளையாடும் அவரிடம் அனைத்து திறமைகளும் இருப்பதாலேயே இந்த விலைக்கு சென்றுள்ளார்” என்று கூறினார்.

Advertisement