சுயநலமற்ற ரோஹித்துக்கு ஆல் டைம் கிரேட் இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடமில்லை.. காரணம் இதான்.. மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா நவீன கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஆரம்பக் காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாற்றமாக விளையாடி வந்த அவரை 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் அப்போதைய கேப்டன் தோனி ஓப்பனிங்கில் களமிறக்கினார். அந்த வாய்ப்பில் நன்றாக விளையாடிய ரோஹித் இந்திய அணி கோப்பையை வெல்ல உதவினார்.

அப்படியே ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதத்தை அடித்து உலக சாதனை படைத்த அவர் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றார். 2019 உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்தக் காரணத்தால் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓப்பனிங் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 2021 லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் சதத்தை அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தன்னை சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார்.

- Advertisement -

சுயநலமற்ற ரோஹித்:

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனைப் படைத்துள்ள அவர் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபியை கேப்டனாக வென்று வரலாறு படைத்துள்ளார். இந்நிலையில் சுயநலமற்ற அணுகுமுறையைக் கொண்ட ரோஹித் சர்மா இந்தியாவின் ஆல் டைம் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இருக்க மாட்டார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய ஆட்டத்தை வைத்தே பேட்ஸ்மேன்களின் தரம் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 சராசரியை மட்டுமே கொண்டுள்ள ரோஹித் ஆல் டைம் பட்டியலில் இடம் பிடிக்க மாட்டார் என்று மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட்டின் ஆல் டைம் கிரேட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் பொருந்த மாட்டார்”

- Advertisement -

ஆம் டைம் கிரேட் இல்ல:

“ஏனெனில் அங்கே கவாஸ்கர், சச்சின், டிராவிட், விராட் கோலி ஆகியோர் இருப்பார்கள். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் சுயநலமற்ற அணுகுமுறை, கேப்டன்ஷிப் ஆகியவற்றை நீங்கள் குறிப்பிட வேண்டும். குறிப்பாக 2023 உலகக் கோப்பைக்கு பின் மக்கள் அவரை அதிகமாக விரும்புகிறார்கள். அணியின் நன்மைக்காக அவர் தன்னுடைய சொந்த சாதனைகளை தியாகம் செய்ததை மக்கள் பார்த்தனர்”

இதையும் படிங்க: 16.5 மில்லியன்.. ப்ரேவிஸை தட்டி தூக்கிய தாதா கங்குலி அணி.. தென் ஆப்ரிக்காவில் சிஎஸ்கே போராடி ஏமாற்றம்

“அதுவே ரோஹித்தின் உண்மையான ஸ்பெஷலாகும். ஒரே ஒருநாள் போட்டியில் கிட்டத்தட்ட 300 ரன்கள் அடிக்கும் அளவுக்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவருடைய டாமினேஷன் அற்புதமானது. ஆனால் இந்தியாவின் ஆல் டைம் கிரேட் பேட்ஸ்மேன்கள் என்று வரும் போது டெஸ்ட் கிரிக்கெட் அதிகப்படியான எடையைப் பிடிக்கும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.

Advertisement