- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா ஜெய்ப்பாங்கன்னு தெரியும்.. ஆனா 20 வருஷத்துக்கு அப்றம் இதை செஞ்சது வேற லெவல்.. கங்குலி பாராட்டு

இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை இந்தியா 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கிள் வெற்றி பெற்றது.

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் முறையாக 10 ரன்னுக்கும் குறைவாக வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு மொத்தம் 9 விக்கெட்டுகளை எடுத்த முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்த நினைத்துப் பார்க்க முடியாத வெற்றி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

- Advertisement -

எதிர்பார்த்த வெற்றி:

இந்நிலையில் ஓவல் கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச்சில் பச்சை புற்கள் இருந்ததைப் பார்த்ததுமே இந்தியா நிச்சயம் வெல்லும் என்று தாம் நினைத்தது நடந்ததாக சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அதை விட சுமார் 20 வருடங்கள் கழித்து இங்கிலாந்தில் இந்தியாவின் டாப் 6 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் அடித்ததே தமக்கு ஆச்சரியமாக அமைந்ததாக கங்குலி பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இந்திய அணி இங்கிலாந்தில் நன்றாகவே விளையாடியது. மான்செஸ்டர் போட்டியில் 4வது நாளில் 0/2 என்ற நிலையில் போராடத் துவங்கிய இந்தியா கடைசிப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது வலுவான பதிலடி செயல்பாடாகும். கில், கம்பீர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இளம் அணியுடன் இங்கிலாந்துக்கு சென்ற அவர்கள் இது போன்ற தரமான செயல்பாட்டை கொடுத்துள்ளார்கள். சுப்மன் கில் சிறந்த வேலையைச் செய்துள்ளார்”

- Advertisement -

எதிர்பாராத மாஸ் பேட்டிங்:

“நீண்ட காலம் கழித்து, 2002 அல்லது 2007க்குப்பின் இங்கிலாந்தில் நம்முடைய டாப் 6 பேட்ஸ்மேன்களும் நல்ல செயல்பாடுகளை கொடுத்துள்ளார்கள். ராகுல், கில், ஜெய்ஸ்வால், பண்ட், ஜடேஜா, சுந்தர் ஆகிய அனைவருமே தொடர்ச்சியாக அசத்தினார்கள். ஓவல் போட்டியின் முதல் நாளில் பிட்ச் பச்சையாக இருந்ததைப் பார்த்த போதே இது இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு என்பது எனக்குத் தெரிந்தது. எனவே அந்த வெற்றி எனக்கு ஆச்சரியமில்லை”

இதையும் படிங்க: கருண் நாயர் இரண்டாவது வாய்ப்பை தவறவிட்டாரு.. ஆனா சாய் சுதர்சன் கெட்டியா பிடிச்சிட்டாரு – மார்க் போட்ட பதான்

“ஏனெனில் வெளிநாடுகளில் கடந்த 20 – 25 வருடங்களில் பிட்ச்சில் கொஞ்சம் உதவி இருந்தால் நாம் வெல்வதாக வரலாறு சொல்கிறது. அது ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற எந்த வெளிநாடாக இருந்தாலும் பிரச்சனையில்லை. பெர்த்தில் 2 முறை, ஜோஹன்ஸ்பர்க், பர்மிங்காம் ஆகிய மைதானங்களில் கொஞ்சம் பச்சை புற்கள் இருந்த போது நமது வேகப்பந்து வீச்சாளர்கள் டேக்கர்களாக செயல்பட்டுள்ளனர். அனைவருடைய சார்பாக சிராஜை நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -