இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இரு அணிகளுக்கும் சாதகமாக இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதன் காரணமாக கோப்பையானது இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரண்டு அணியின் வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட்டதால் இந்த தொடரில் மட்டும் 7000 ரன்களுக்கு மேல் விளாசபட்டது.
கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சனை மதிப்பிட்ட : இர்பான் பதான்
இந்திய அணியின் சார்பாக இந்த தொடரில் மொத்தமாக 12 சதங்கள் அடிக்கப்பட்டாலும் தமிழக வீரரான சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் ஆகிய இருவரது ஆட்டமும் இந்த தொடரில் சுமாராகவே இருந்தது. அதிலும் குறிப்பாக 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இணைந்திருந்த கருண் நாயர் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவரது இடம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.
அதேவேலையில் சாய் சுதர்சன் ஓரளவு சுமாரான செயல்பாட்டை வெளிப்படுத்தி தேர்வுக்குழுவினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் ஆகியோர் விளையாடிய விதம் குறித்தும், அவர்களுக்கு என்ன மதிப்பெண் வழங்குகிறேன்? என்பது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
கருமாயிருக்கு பத்தில் நான்கு மதிப்பெண்கள் மட்டுமே நான் வழங்குவேன். ஏனெனில் அவர் கேட்டுக்கொண்டது போன்றே கிரிக்கெட் அவருக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கியது. ஆனால் அந்த வாய்ப்பை கருண் நாயர் பயன்படுத்த தவறிவிட்டார். அதிலும் குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி குறைந்த இலக்கை சேசிங் செய்கையில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அதுமட்டும் இன்றி அடுத்தடுத்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளிலும் நல்ல துவக்கம் கிடைத்தாலும் பெரிய ரன் குவிப்பை அளிக்க முடியாமல் அவர் ஆட்டமிழந்தார்.
அதனால் அவருக்கு நான்கு மதிப்பெண்கள் மட்டுமே வழங்குவேன். அதே வேளையில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு 5 மதிப்பெண்களை வழங்குவேன். ஏனெனில் அவர் இந்த வாய்ப்பை மிகக் கடுமையான உழைப்பிற்கு பிறகு பெற்றுள்ளார். அந்த வகையில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஒரு போட்டியில் விளையாடி விட்டு அடுத்த போட்டியிலே அவர் நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க : முதல் முறையாக டாப் 5-க்குள் நுழைந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.. ஐ.சி.சி வெளியிட்ட தரவரிசை – விவரம் இதோ
ஆனாலும் தனக்கு மீண்டும் கிடைத்த வாய்ப்பில் இரண்டு அரை சதங்களை பதிவு செய்து தனக்குள் இருக்கும் திறமையை அவர் நிரூபித்துள்ளார். அதேபோன்று டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடும் அவர் நல்ல திறனுடைய வீரராகவும் இருக்கிறார். எனவே அவருக்கு ஐந்து மதிப்பெண்களை வழங்குவதாக இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.



