- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 – 0ன்னு குறைச்சா பேசுனீங்க.. இதான் தெறிக்க விடும் இந்தியா.. இதை செய்யலன்னா காலி.. ஆஸிக்கு கங்குலி பதிலடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்தது.

முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவை இத்தொடரில் கண்டிப்பாக வீழ்த்தும் என்று ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா இல்லாமல் பும்ரா தலைமையில் சிறப்பாக விளையாடி இந்தியா வெற்றி கண்டு அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

கங்குலி பதிலடி:

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியால் குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பெருமை தெரிவித்துள்ளார். இத்துடன் இனிமேலும் குறைத்து மதிப்பிடாமல் விளையாடவில்லை எனில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்ததால் இந்தியா தூக்கி எறியப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் யார் தூக்கி எறியப்பட்டுள்ளார்கள் என்பதை இப்போது பாருங்கள். இந்திய அணி அற்புதமான திறமைகளை கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவை பொறுத்த வரை நன்றாக விளையாட வேண்டும். இல்லையெனில் இந்த மிகப்பெரிய தொடர் உங்களுக்கு பின்னடைவாக அமையும்”

- Advertisement -

இது தான் இந்தியா:

“பும்ரா, கோலி, ஜெய்ஸ்வால் ஆகியோர் அசத்தியதை பார்ப்பது நன்றாக இருந்தது. 22 வயது ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவில் முதல் போட்டியில் அசத்தினார். நித்திஷ் ரெட்டி பெரிய போட்டியில் தடுமாறியதாக தெரியவில்லை. இது தான் எதிரணியான உங்களுக்கான இந்திய அணி. அடுத்த போட்டி பகலிரவாக நடைபெற உள்ளது மிகவும் முக்கியம். அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலியா நல்ல சாதனைகளை வைத்துள்ளது”

இதையும் படிங்க: இதுதான் ஜெய்ஸ்வாலின் மிகச்சிறப்பான இன்னிங்ஸ்ஸா எப்போதுமே இருக்கும். ஏன் தெரியுமா? – பும்ரா பாராட்டு

“எனவே இந்த பெரிய தொடரில் இந்தியா அசத்தும் என்ற நம்பிக்கையுடன் நான் இருக்கிறேன்” என்று கூறினார். அந்த வகையில் அடுத்த 4 போட்டிகளில் குறைந்தது இந்தியா 3 வெற்றிகளை பெறும் முனைப்புடன் விளையாட உள்ளது. அப்படி 3 வெற்றிகளை பெற்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -