ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இந்த போட்டியில் 259 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக நிச்சயம் இந்திய அணி பெரிய சிக்கலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் :
இதுதான் அவரது சிறப்பான இன்னிங்ஸ் :
கேப்டன் பும்ரா, சிராஜ் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரது மிகச் சிறப்பான பந்துவீச்சு காரணமாக ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி அவர்களது முதல் இன்னிங்சில் 104 ரன்களுக்கு சுருட்டியது. பின்னர் இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் சிறப்பான கம்பேக் கொடுத்த இந்திய அணி 487 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.
அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 238 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்திய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீராக விளையாடிய ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் மைதானத்தின் தன்மையை கணிக்க முடியாமல் 8 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகியிருந்தார்.
அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸின் போது மிகச்சிறப்பான கம்பேக் கொடுத்த அவர் 297 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 161 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஜெய்ஸ்வாலின் ஆட்டம் குறித்து பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் பும்ரா கூறுகையில் :
ஜெய்ஸ்வால் தற்போது தனது கிரிக்கெட் கரியரை சிறப்பாக துவங்கி இருக்கிறார் என்று நினைக்கிறேன். இந்த இன்னிங்ஸ் தான் அவரது மிகச் சிறப்பான இன்னிங்ஸ்ஸாக எப்போதும் இருக்கப் போகிறது. ஏனெனில் பொதுவாகவே அடித்து ஆடக்கூடிய அதிரடியான வீரரான ஜெயஸ்வால் இந்த போட்டியின் சூழ்நிலை கருத்தில் கொண்டு நல்ல பந்துகளுக்கு மரியாதை கொடுத்து விட்டு நேரம் கிடைக்கும்போது ரன்களை குவித்து அசத்தினார்.
இதையும் படிங்க : 2021லயே கிடைச்சுருக்க வேண்டியது.. 2வது போட்டியில் ரோஹித் கேப்டனா? என் மகன்கிட்ட இதை பும்ரா பேட்டி
அப்படி அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் விட வேண்டிய பந்துகளை விட்டும் அவர் நிதானத்தை காண்பித்ததும், நீண்ட நேரம் விளையாடியதும் என இந்த இன்னிங்ஸ் சிறப்பாக அமைந்தது எனவே தான் அவருக்கு இந்த இன்னிங்ஸ் மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸ்ஸாக இருக்கும் என்று பும்ரா பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



