2021லயே கிடைச்சுருக்க வேண்டியது.. 2வது போட்டியில் ரோஹித் கேப்டனா? என் மகன்கிட்ட இதை பும்ரா பேட்டி

Jasprit Bumrah 3
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 1 – 0* என்ற கணக்கில் இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மேலும் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்த இந்தியா கம்பேக் கொடுத்துள்ளது.

குறிப்பாக நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியால் இந்தியா இத்தொடரில் தோற்கும் என்று பல முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கணித்துள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா இல்லாமல் பும்ரா தலைமையில் இந்தியா அபாரமாக விளையாடி பதிலடி கொடுத்துள்ளது. இந்த நிலையில் முதல் போட்டியில் வென்றதால் பும்ரா கேப்டனாக தொடரலாம் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

- Advertisement -

ரோஹித் தான் கேப்டன்:

இருப்பினும் ரோகித் சர்மா தான் இந்திய அணியின் கேப்டன் என்றும் பும்ரா கூறியுள்ளார். அவருக்கு தேவையான உதவிகளை செய்வதே துணை கேப்டனாக தம்முடைய வேலை என்றும் பும்ரா சுயநலமின்றி தெரிவித்துள்ளார். மேலும் 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ரத்து செய்யப்பட்ட ஐந்தாவது போட்டியிலேயே தமது தலைமையில் இந்தியாவுக்கு கிடைத்திருக்க வேண்டிய முதல் வெற்றி தற்போது கிடைத்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா எங்களுடைய அணியின் கேப்டன். நான் அவருடைய இடத்தை நிரப்பினேன். அவருக்கு என்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்ய உள்ளேன். இந்தியாவில் இருந்த போதே அவரிடம் நம்முடைய அணியை எப்படி கூர்மை செய்வது என்பது பற்றி பேசினேன். அடுத்த போட்டியில் நான் இந்திய அணியை வழிநடத்தப் போகிறேன் என்று சொல்ல மாட்டேன்”

- Advertisement -

மகன்கிட்ட சொல்வேன்:

“ஆனால் அவருக்கு முடிந்தளவுக்கு நான் உதவிகளை செய்ய உள்ளேன். கேப்டனாக பதிவு செய்த இந்த வெற்றியால் பெருமை. கேப்டனாக இது எனக்கு இரண்டாவது போட்டி. இங்கிலாந்தின் பர்மிங்காம் போட்டியில் நாங்கள் வெற்றியை நெருங்கினோம். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து சிறப்பாக விளையாடி வென்றார்கள். அந்த தோல்வியிலிருந்து பாடங்களை கற்று இப்போட்டியில் நாங்கள் கம்பேக் கொடுத்து வென்றது மகிழ்ச்சி”

இதையும் படிங்க:

“என்னுடைய மகன் இங்கே இருக்கிறார். இந்த வெற்றியை அவருடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன். இந்த வெற்றியை நீண்ட காலம் நினைவில் வைத்திருப்பேன். மிகவும் இளமையாக இருக்கும் என்னுடைய பையன் வளரும் போது அவரிடம் சொல்ல நிறைய கதைகள் உள்ளன. பெரியாளாக வளர்ந்த பின் இந்தியா பதிவு செய்த முக்கியமான வெற்றியில் நீயும் இருந்தால் என்று அவரிடம் சொல்வேன்” எனக் கூறினார்.

Advertisement