அவங்க இப்படி செஞ்சது எனக்கே ஆச்சர்யம்.. ஸ்ரேயாஸ், இஷான் நீக்கப்பட்டது பற்றி சௌரவ் கங்குலி கருத்து

Sourav Ganguly 4
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 2023 – 24 காலண்டரில் விளையாடப் போகும் வீரர்களுக்கு வீரர்களுக்கு வழங்கப்படும் மத்திய சம்பளம் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிசான் ஆகிய 2 இளம் வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்பதால் அவர்களுக்கு எதிராக பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.

முன்னதாக இங்கிலாந்து தொடரில் உங்களை தேர்வு செய்வதற்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தயாராக இருங்கள் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாக இஷான் கிஷானிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அதே போல இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லேசான காயத்தை சந்தித்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு வாரத்திற்குள் குணமடைந்து விட்டதால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

- Advertisement -

கங்குலி கருத்து:
ஆனால் அவர்களின் பேச்சைக் கேட்காத இஷான் கிசான் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதே போல பரோடாவுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை காலிறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை. அதன் காரணமாகவே அவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான் ஆகிய 2 திறமையான வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் இப்படி செய்தது தமக்கு ஆச்சரியமளிப்பதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். எனவே பிசிசிஐ எடுத்துள்ள இந்த முடிவு சரியானது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டிகள் பேசியது பின்வருமாறு. “பிசிசிஐ அவர்கள் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடுவதை விரும்புகிறது”

- Advertisement -

“பிரீமியர் தொடரான ரஞ்சிக் கோப்பையில் இஷான் மற்றும் ஸ்ரேயாஸ் விளையாடாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது பிசிசிஐ முடிவு. அவர்கள் சரியாகவே எடுத்துள்ளனர். வீரர்கள் முதல் தர கிரிக்கெட்டில் கண்டிப்பாக விளையாட வேண்டும். அவ்வாறு செய்யாதது தவறு. ஒப்பந்தத்தில் கையெழுத்தான வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதை பிசிசிஐ எதிர்பார்க்கும். எனவே அடுத்த சில நாட்களில் மும்பைக்காக ஸ்ரேயாஸ் ஐயர் செமி ஃபைனலில் விளையாட உள்ளார்”

இதையும் படிங்க: அவருக்கு மட்டும் ஒரு நியாயம்.. இஷான், ஸ்ரேயாஸ்க்கு ஒரு நியாயமா? பிசிசிஐக்கு இர்பான் பதான் கேள்வி

“அவர்கள் இளம் வீரர்கள். ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ஒப்பந்தத்தை பெற்று 3 வகையான இந்திய அணியிலும் விளையாடி வரும் இசான் கிசான் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாதது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். அவர் ஏன் அதை செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவுக்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் நீங்கள் உள்ளூரிலும் விளையாட வேண்டும். எனவே ஒப்பந்தமாகியுள்ள வீரர்கள் விதிமுறையை பின்பற்றாமல் போனால் பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் உரிமையை கொண்டுள்ளது” என்று கூறினார்.

Advertisement