அதை பற்றி கவலைப்படல.. என்னோட கஷ்டம் உங்களுக்கு தெரியுமா? ரசிகர்களுக்கு ஹர்டிக் பாண்டியா பதிலடி

Hardik Pandya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட அவர் 2018ஆம் ஆண்டு நாட்டிங்கம் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்று விமர்சித்த இங்கிலாந்து ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் கருத்தை பொய்யாக்கினார். அதனால் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இந்தியாவுக்கு கிடைத்து விட்டார் என்று ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

இருப்பினும் 2019 உலகக் கோப்பைக்கு பின் சந்தித்த காயத்தால் தடுமாறிய அவர் 2021 டி20 உலகக் கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டார். ஆனால் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் முதல் வருடத்திலேயே கேப்டனாக கோப்பையை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்து வெள்ளைப்பந்து போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

- Advertisement -

பாண்டியாவின் பதிலடி:
ஆனால் அதிலும் அடிக்கடி பணிச்சுமை மற்றும் காயத்தால் தொடர்ந்து விளையாடாத அவர் 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்து பாதியிலேயே வெளியேறினார். தற்போது அதிலிருந்து குணமடைந்து வரும் அவர் நேரடியாக ஐபிஎல் 2024 தொடரில் அதுவும் பணத்துக்காக குஜராத் அணியிலிருந்து வெளியேறி மும்பை அணியின் கேப்டனாக விளையாட உள்ளார்.

அதனால் ஹர்திக் பாண்டியா நாட்டுக்காக தொடர்ந்து விளையாட மாட்டார். ஆனால் பணத்துக்காக மட்டும் ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் இப்போதெல்லாம் வீட்டை விட்டு வெளியேற முடியாத கஷ்டமான சூழ்நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

- Advertisement -

அப்படிப்பட்ட சூழ்நிலையில் சமூக வலைதளங்களில் தம்மை கலாய்க்கும் ரசிகர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இப்போது நான் வெளியே செல்வதில்லை என்பது என்னைப் பற்றி என் ரசிகர்களுக்கு தெரியாத ஒரு விஷயமாகும். கடந்த 2 – 3 வருடங்களாக நான் பொதுவெளிக்கு வரவில்லை. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே வெளியே வருகிறேன்”

இதையும் படிங்க: அவருக்கு மட்டும் ஒரு நியாயம்.. இஷான், ஸ்ரேயாஸ்க்கு ஒரு நியாயமா? பிசிசிஐக்கு இர்பான் பதான் கேள்வி

“இப்போதெல்லாம் வீட்டிலேயே இருக்க விரும்புகிறேன். அதனால் 50 நாட்கள் கூட வீட்டை விட்டு வெளியேறாத நேரங்கள் இருந்தன. அதனால் சமூக வலைதளங்களில் என்ன நடக்கிறது என்பதை பற்றி நான் பேசமாட்டேன். அங்கே யார் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக தேர்வாக முடியும் என்ற நிலையில் பாண்டியா இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement