அவருக்கு மட்டும் ஒரு நியாயம்.. இஷான், ஸ்ரேயாஸ்க்கு ஒரு நியாயமா? பிசிசிஐக்கு இர்பான் பதான் கேள்வி

Irfan Pathan 2
- Advertisement -

பிசிசிஐ அறிவித்துள்ள 2023 – 24 காலண்டர் வருடத்திற்கான இந்திய அணியின் புதிய சம்பள ஒப்பந்தப் பட்டியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்த பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் நீக்கப்பட்டதற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. முன்னதாக கடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து இஷான் கிசான் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டதாக சொல்லி வெளியேறினார்.

அந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் உங்களை தேர்வு செய்ய வேண்டுமெனில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தயாராக இருங்கள் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு அறிவுரை வழங்கினார். அதே போல மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ள வீரர்கள் அனைவரும் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் ரஞ்சிக்கோப்பையில் விளையாடுவது அவசியம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளிப்படையாக எச்சரித்திருந்தார்.

- Advertisement -

சமமற்ற நியாயம்:
இருப்பினும் அவர்களுடைய பேச்சைக் கேட்காத கிஷான் கிசான் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மறுபுறம் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லேசான காயத்தால் வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு வாரத்திலேயே அதிலிருந்து குணமடைந்ததால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவரும் பரோடாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் மும்பை அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை.

தற்போது அதன் காரணமாகவே அவர்கள் பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாவிட்டாலும் உள்ளூர் ஒருநாள் மற்றும் டி20 தொடரான விஜய் ஹசாரே, சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் ஹர்திக் பாண்டியா விளையாடியிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் கடந்த ஒரு வருடமாக உள்ளூர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடாத ஹர்திக் பாண்டியாவை மட்டும் 5 கோடிக்கு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ஏன் என்று பிசிசிஐக்கு இர்ஃபான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் பாண்டியாவுக்கு ஒரு நியாயம் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷானுக்கு ஒரு நியாயம் என்ற வகையில் பிசிசிஐ செயல்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: அவரு என்ன தப்பு பண்ணாரு? அவரை ஏன் சம்பள லிஸ்ட்ல இருந்து தூக்குனீங்க – ரசிகர்கள் கொந்தளிப்பு

இது பற்றி ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ், இஷான் இருவரும் திறமையான வீரர்கள். எனவே அவர்கள் வலுவாக கம்பேக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் ஒருவேளை ஹர்திக் பாண்டியா போன்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்பாத வீரர்கள் நாட்டுக்காக விளையாடாத போது உள்ளூர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் அல்லவா? எனவே இந்த விதிமுறைகள் அனைவருக்கும் சமமாக இல்லாமல் போனால் இந்திய கிரிக்கெட் தாங்கள் விரும்பியவற்றை சாதிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

Advertisement