அவரு என்ன தப்பு பண்ணாரு? அவரை ஏன் சம்பள லிஸ்ட்ல இருந்து தூக்குனீங்க – ரசிகர்கள் கொந்தளிப்பு

Chahal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ நேற்று இந்திய வீரர்களுக்கான வருடாந்திர சம்பள பட்டியலை வெளியிட்டு இருந்தது. அதில் ஏ ப்ளஸ், ஏ, பி, சி என நான்கு பிரிவுகளின் கீழ் வீரர்களின் தகுதிக்கேற்ப சம்பளத்தையும் நிர்ணயித்திருந்தது. அந்த வகையில் ஏ ப்ளஸ் பிரிவில் அதிகபட்சமாக 7 கோடி ரூபாய் சம்பளம் பெறும் வீரர்களாக ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அவர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் அவரவர்களின் தகுதியின் அடிப்படையில் சம்பள பிரிவுகளில் இடம் பிடித்துள்ளனர். அதில் இளம் வீரர்கள் பலருக்கும் இடம் கிடைத்துள்ளது. அதேபோன்று ஒரு சில வீரர்களுக்கு தகுதி உயர்வும் வழங்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த சம்பள பட்டியலில் சில இந்திய வீரர்களுக்கு நிராகரிப்பும் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வீரரான 33 வயதான யுஸ்வேந்திர சாஹலுக்கு சம்பள பட்டியலில் இடம் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான யுஸ்வேந்திர சாஹல் தோனியின் தலைமையின் கீழ் மிகச்சிறப்பாக செயல்பட்டவர். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 80 டி20 போட்டிகள் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

- Advertisement -

இவ்வேளையில் சமீப காலமாகவே அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் அதனை தொடர்ந்து தற்போது சம்பள பட்டியலில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டுள்ளதால் நிச்சயம் அவர் மீண்டும் இந்திய அணிக்கு நுழைவது கடினம் என்றே தெரிகிறது.

இதையும் படிங்க : ராஞ்சி விமான நிலையத்தில் இளம் வீரரின் செக்யூரிட்டி அப்பாவை சந்தித்த சுப்மன் கில்.. பின்னணி விவரம்

இருப்பினும் 33 வயதே ஆன அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு இருந்தும் அவரை ஏன் இப்படி சம்பள பட்டியலில் இருந்து நீக்கி விட்டீர்கள்? என்று யுஸ்வேந்திர சாஹலுக்கு ஆதரவாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement