ராஞ்சி விமான நிலையத்தில் இளம் வீரரின் செக்யூரிட்டி அப்பாவை சந்தித்த சுப்மன் கில்.. பின்னணி விவரம்

Shubman Gill Robin Minz Father
- Advertisement -

ராஞ்சியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதனால் 4 போட்டிகளில் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையையும் வென்றுள்ளது. இதை தொடர்ந்து இத்தொடரின் 5வது போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் துவங்க உள்ளது

அதில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் ராஞ்சியிலிருந்து ஹிமாச்சல் பிரதேசத்திற்கு புறப்பட்டு சென்றனர். அதற்காக ராஞ்சி விமான நிலையத்திற்கு வந்த இந்திய வீரர்களில் சுப்மன் கில் மட்டும் அங்கே இருந்த பாதுகாவலர் ஒருவரிடம் சென்று பேசினார். அந்த பாதுகாவலர் வேறு யாருமல்ல. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ராபின் மின்ஸ் தந்தை பிரான்சிஸ் ஆவார்.

- Advertisement -

ரசிகர்கள் பாராட்டு:
இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் தற்போது ராஞ்சி விமான நிலையத்தில் பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களில் ஒருவரான அவருடைய 21 வயதாகும் மகன் ராபின் மின்ஸ் கடந்த சில வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

அதில் கடந்த வருடன் உள்ளூரில் நடைபெற்ற ஒரு டி20 தொடரில் ஒடிசாவுக்கு எதிராக 35 பந்துகளில் 73 ரன்கள் அடித்த ராபின் மின்ஸை ராஞ்சியின் கிறிஸ் கெயில் என்று அங்குள்ள ரசிகர்கள் அழைக்கின்றனர். அதன் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 20 லட்சம் அடிப்படை விலையில் பங்கேற்ற அவரை குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வாங்குவதற்கு போட்டி போட்டன. இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை 3.6 கோடி என்ற பெரிய தொகைக்கு போட்டி வாங்கியது.

- Advertisement -

அதனால் ஐபிஎல் தொடரில் வாங்கப்பட்ட முதல் பழங்குடியின பிரிவை சேர்ந்த வீரர் என்ற பெருமையை ராபின் மின்ஸ் பெற்றார். அந்த நிலையில் குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா கேப்டனாக விலகியதை தொடர்ந்து சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் தம்முடைய அணியில் விளையாட உள்ள ராபின் மின்ஸ் பற்றி அவருடைய தந்தையிடம் சுப்மன் கில் பேசினார்.

இதையும் படிங்க: 279/9 ரன்ஸ்.. தடுமாறிய ஆஸி.. தனிஒருவனாக நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்த க்ரீன்.. ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி

அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுப்மன் கில் இது பற்றி கூறியுள்ளது பின்வருமாறு. “ராபின் மின்ஸின் தந்தையை சந்தித்ததில் பெருமை. உங்களின் பயணமும் கடின உழைப்பும் ஊக்கமளிக்கிறது. உங்களை ஐபிஎல் தொடரில் காண காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் அனுபவமற்ற கேப்டன்ஷிப் பதவியில் எப்படி செயல்பட போகிறார் என்பதை பார்க்க ரசிகர்களும் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement