279/9 ரன்ஸ்.. தடுமாறிய ஆஸி.. தனிஒருவனாக நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்த க்ரீன்.. ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி

Cameron green
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு முதலாவதாக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வென்றது. இதைத் தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 29ஆம் தேதி வெலிங்டன் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த ஸ்டீவ் ஸ்மித்தை 31 ரன்கள் காலி செய்த மாட் ஹென்றி மறுபுறம் நிதானமாக விளையாடிய உஸ்மான் கவாஹாவையும் 33 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். அப்போது வந்த கேமரூன் கிரீன் நிதானமாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் மார்னஸ் லபுஸ்ஷேன், டிராவிஸ் ஹெட் தலா 1 ரன்னில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

ஆர்சிபி ரசிகர்கள் ஹேப்பி:
இருப்பினும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேமரூன் கிரீன் அரை சதம் கடந்தார். அவருடன் சேர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவை காப்பாற்ற முயற்சித்த மிட்சேல் மார்ஷ் 40 ரன்கள் நடையை கட்டினார். அதைத்தொடர்ந்து வந்த அலெக்ஸ் கேரி 10, மிட்சேல் ஸ்டார்க் 9, கேப்டன் பட் கமின்ஸ் 16, நேதன் லயன் 5 ரன்களில் நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் அவுட்டாகி சென்றனர்.

ஆனாலும் எதிர்ப்புறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடி நியூசிலாந்துக்கு மிகப்பெரிய சவாலாக மாறிய கேமரூன் கிரீன் 16 பவுண்டரியுடன் சதமடித்து ஆஸ்திரேலியாவை சரிய விடாமல் காப்பாற்றினார். அவருடைய போராட்டமான ஆட்டத்தால் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 279/9 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் கேமரூன் கிரீன் 103*, ஜோஷ் ஹேசல்வுட் 0* ரன்களுடன் உள்ளனர்.

- Advertisement -

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 4* விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீன் கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். இருப்பினும் காயத்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிய அவரை மும்பை கழற்றி விட்டதை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் 17.5 கோடி என்ற பெரிய தொகைக்கு டிரேடிங் முறையில் வாங்கியது.

இதையும் படிங்க: கடைசி போட்டியில் இருந்தும் விலகவுள்ள நட்சத்திர இந்திய வீரர்.. இன்னும் காயம் குணமடையல – விவரம் இதோ

அதனால் இந்த சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ள அவர் ஐபிஎல் துவங்குவதற்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் இப்போட்டியில் சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறேன் என்பதை காண்பித்துள்ளார். அந்த வகையில் விராட் கோலி, பஃப் டு பிளேஸிஸ், கிளன் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் ஆகிய டாப் 4 பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement