கடைசி போட்டியில் இருந்தும் விலகவுள்ள நட்சத்திர இந்திய வீரர்.. இன்னும் காயம் குணமடையல – விவரம் இதோ

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது முதல் போட்டிக்கு பின்னர் அடுத்தடுத்த மூன்று போட்டியிலும் வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றி விட்டதால் இந்த கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்தும் கே.எல் ராகுல் விலகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற முதல் போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்ச ரன்களை குவித்த கே.எல் ராகுல் 86 ரன்கள் அடித்திருந்தார்.

அதை தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியை காயம் காரணமாக தவறவிட்ட அவர் தற்போது ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தினால் அவர் டாக்டர்களின் ஆலோசனையை பெறுவதற்காக லண்டன் சென்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் துவங்கவுள்ள வேளையில் தற்போது அந்த தொடரில் பங்கேற்பதற்காகவே முழு உடற்தகுதியை பெற்று விட வேண்டும் என்பதற்காக கே.எல் ராகுல் சிகிச்சை பெற இருக்கிறார்.

இதையும் படிங்க : இஷான் போகட்டும்.. பாவம் ஸ்ரேயாஸ் ஐயர்.. எப்போவாச்சும் விளையாடும் அவருக்கு 5 கோடியா? பிசிசிஐ’யை விளாசும் ரசிகர்கள்

லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் அவர் மார்ச் 24-ஆம் தேதி தங்களது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறார். ஒருவேளை காயம் குணமடையவில்லை என்றால் ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

Advertisement