இஷான் போகட்டும்.. பாவம் ஸ்ரேயாஸ் ஐயர்.. எப்போவாச்சும் விளையாடும் அவருக்கு 5 கோடியா? பிசிசிஐ’யை விளாசும் ரசிகர்கள்

Shreyas Iyer 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக 2023 காலண்டர் வருடத்தின் விளையாடும் வீரர்களுக்கான மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உச்சகட்டமாக 7 கோடி சம்பளத்தை பெறும் ஏ ப்ளஸ் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆனால் இந்த ஒப்பந்த பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிசான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வெளிப்படையாக சொல்லியும் கேட்காத இசான் கிஷான் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவதற்காக தயாராகி வருகிறார்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
அதனால் அவர் நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் வரவேற்பும் தெரிவிக்கின்றனர். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் லேசான காயத்தை சந்தித்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு வாரத்தில் மீண்டும் குணமடைந்ததால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் முதுகு வலி இருப்பதால் பரோடாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் மும்பை அணிக்காக அவர் ரஞ்சிக்கோப்பையில் விளையாடவில்லை.

அப்போது மதிய ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ள அனைத்து வீரர்களும் ஃபிட்டாக இருந்தால் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று ஜெய ஷா எச்சரித்திருந்தார். அதன் காரணமாக விரைவில் தமிழ்நாட்டுக்கு எதிராக நடைபெற உள்ள ரஞ்சிக் கோப்பை செமி ஃபைனலில் மும்பை அணிக்காக விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வாகியுள்ளார். அந்த வகையில் காயத்தால் வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர் முழுமையாக குணமடைந்து வருவதற்குள் இப்படி சம்பள பட்டியலில் இருந்து நீக்குவது நியாயமா? என்று ரசிகர்கள் பிசிசிஐ மீது திருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -

அதை விட சமீப காலங்களாகவே அடிக்கடி காயத்தை சந்தித்து எப்போதாவது மட்டுமே இந்தியாவுக்கு விளையாடும் ஹர்டிக் பாண்டியாவை ஏ பிரிவில் 5 கோடியை சம்பளமாக கொடுத்து பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் 2023 உலகக் கோப்பையில் பாதியிலேயே வெளியேறிய பாண்டியா உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக விளையாட தயாராகி வருகிறார்.

இதையும் படிங்க: சம்பள ஒப்பந்தத்தில் சர்பராஸ், துருவ் ஜுரேல் இடம் பெறாதது ஏன்? எப்போது தேர்வாவார்கள்.. பிசிசிஐ அறிவிப்பு

மறுபுறம் 2023 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் 70 பந்துகளில் சதமடித்தது உட்பட 530 ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் ஐயர் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக விளையாடி வருகிறார். ஆனால் அவரை ஏதோ ஒரு காரணம் சொல்லி அதிரடியாக நீக்கியுள்ள பிசிசிஐ எப்போதாவது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் பாண்டியாவுக்கு 5 கோடிகள் கொடுப்பது நியாயமா? என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement