உழைக்காம எதுவும் வராது, சச்சின் டெண்டுல்கர் – விராட் கோலி ஆகியோரில் சிறந்தவர் யார்? விவாதத்துக்கு கங்குலி பதில்

SAchin tendulkar virat kohli sourav ganguly
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஜனவரி 12ஆம் தேதி துவங்கிய 2வது போட்டியிலும் வென்று கோப்பையை வெல்ல போராட உள்ளது. முன்னதாக கௌகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் 113 ரன்கள் விளாசி தன்னுடைய 45வது சதத்தை விளாசிய விராட் கோலி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 73 சதங்களையும் விளாசியுள்ள உள்ள அவர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை உடைப்பாரா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Virat Kohli

- Advertisement -

அதை விட 2019க்குப்பின் சதமடிக்காமல் கடுமையான விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி கடந்த ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 1021 நாட்கள் கழித்து சதமடித்து பார்முக்கு திரும்பினார். அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்ட அவர் கடந்த மாதம் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் சதமடித்து அசத்திய நிலையில் தற்போது இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் சதமடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

கங்குலியின் பதில்:
ஆனாலும் கடைசியாக அவர் அடித்த 3 சதங்களும் சுமாரான பந்து வீச்சை கொண்ட ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக அதுவும் பிளாட்டான பிட்ச்சில் அடித்தார் என்று சில விமர்சனங்கள் காணப்படுகிறது. அதை விட 101 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்தாலும் விராட் கோலியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் வெளிப்படையாக விமர்சித்தார். ஏனெனில் அந்த காலத்தில் ஒரே ஒரு பந்து மட்டும் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஒரு போட்டிக்கு 2 புதிய பந்துகள் பயன்படுத்துவதுடன் உள்பட்டத்திற்குள் 5 பீல்டர்கள் நிறுத்தப்படுவது போன்ற நிறைய விதிமுறைகளை பேட்டிங்க்கு சாதகமாக மாறிவிட்டதாக அவர் கூறினார்.

அதாவது சச்சின் போல விராட் கோலி அடிக்கும் சதங்களிலும் ரன்களிலும் தரமில்லை என்பது தற்போது ஒரு தரப்பினரின் விமர்சனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி ஆகியோரது காலத்தையும் ஆட்டத்தையும் சதங்களையும் ஒப்பிட்டு சிறந்தவர் யார் என்பதை முடிவு செய்வது மிகவும் கடினமானது என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் மற்றும் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார். அதே சமயம் சிலர் கூறுவது போல விராட் கோலி அடித்துள்ள 45 சதங்கள் அவ்வளவு எளிதாக அடிக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி கொல்கத்தாவில் நடைபெறும் 2வது போட்டிக்கு முன்பாக கொடுத்த பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது பதிலளிப்பதற்கு மிகவும் கடினமான கேள்வியாகும். ஏனெனில் விராட் கோலி மிகச் சிறந்த வீரர். இது போலவே நிறைய அற்புதமான இன்னிங்ஸ்களை அவர் விளையாடியுள்ளார். அதே சமயம் 45 சதங்களும் இதே விதத்தில் வந்திருக்காது. அவரிடம் மிகவும் ஸ்பெஷலான திறமை உள்ளது. சமீபத்தில் குறிப்பிட்ட சில காலத்திற்கு அவர் பெரிய ரன்களை குவிக்காமலும் இருந்தார். ஆனால் தற்போது பார்முக்கு வந்துள்ள அவர் மிகச் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறினார்.

Ganguly-1

அவர் கூறுவது போல கத்துக்குட்டிகளை அடித்து விட்டார் என்று விராட் கோலியை விமர்சிப்பவர்கள் அதே காலகட்டத்தில் எத்தனை இந்திய வீரர்கள் அதே அணிகளுக்கு எதிராக பெரிய ரன்களை அடித்தார்கள் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அதை விட ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக சூரியகுமார் யாதவ், ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் கைவிட்டனர்.

இதையும் படிங்க: கபில் தேவுக்கு பின் நீங்க தான் சிறந்த ஆல் ரவுண்டர் – ரசிகர்களின் பாராட்டுக்கு அஷ்வின் கொடுத்த பதில் இதோ

அப்போது வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி அவமான தோல்வியிலிருந்து காப்பாற்றி சரித்திர வெற்றி பெற வைத்த விராட் கோலி யாருக்காகவும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர் ஏற்கனவே பல வெளிநாடுகளில் பல தரமான தரமான பவுலர்களை எதிர்கொண்டு நிறைய சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement