கபில் தேவுக்கு பின் நீங்க தான் சிறந்த ஆல் ரவுண்டர் – ரசிகர்களின் பாராட்டுக்கு அஷ்வின் கொடுத்த பதில் இதோ

Ravichandran Ashwin Kapil Dev
- Advertisement -

2023 காலண்டர் வருடத்தில் நடைபெறும் 2 ஐசிசி உலகக் கோப்பைகளில் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்லும் லட்சியத்தை கொண்டுள்ள இந்தியா அதற்காக வரும் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றாக கட்டாயத்தில் களமிறங்குகிறது. சுழல் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் அத்தொடரில் இந்தியாவின் கருப்பு குதிரையாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கருதப்படுகிறார். கடந்த 2011இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்பின்னராக உருவெடுத்த அவர் கடந்த 12 வருடங்களில் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

Ashwin Sachin Tendulkar

- Advertisement -

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரராக ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரை மிஞ்சி சாதனை படைத்துள்ள அவர் டாப் 10 பவுலர்கள் தரவரிசையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் ஒரே ஸ்பின்னராக இருந்து வருகிறார். மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் விளையாடிய அனுபவத்தை வைத்து பேட்டிங்கிலும் 5 சதங்களை அடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் 3000+ ரன்களையும் 400+ விக்கெட்களையும் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.

அந்தளவுக்கு இல்ல:
சொல்லப்போனால் வெறும் 88 போட்டிகளிலேயே அதை சாதித்துள்ள அவர் கபில் தேவை மிஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000+ ரன்கள் மற்றும் 400+ விக்கெட்களை எடுத்த இந்திய மற்றும் ஆசிய வீரராக சாதனை படைத்துள்ளார். மேலும் சமீபத்திய வங்கதேச டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியில் செய்த பினிஷிங், டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக செய்த பினிஷிங் போன்ற நிறைய மறக்க முடியாத வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த ரவிச்சந்திரன் அஷ்வின் கபில் தேவுக்கு நிகரான ஆல் ரவுண்டராக அசத்தி வருகிறார்.

kapil dev ashwin gavaskar

இந்நிலையில் கபில் தேவுக்கு பின் சிறந்த ஆல் ரவுண்டர் என்று ரசிகர்கள் சொல்வதற்கு நான் மகிழ்ச்சியடையவில்லை அதே சமயம் வருத்தமும் படவில்லை என்று அஷ்வின் கூறியுள்ளார். ஏனெனில் தம்மை விட இந்தியா மட்டுமல்லாது இவ்வுலகமே கண்ட மகத்தான வீரர்களில் கபில் தேவ் ஒருவர் என்று அவர் பாராட்டியுள்ளார். எனவே அவரது பாதையில் நடப்பது தமக்குப் பெருமையே என்று தெரிவிக்கும் அஷ்வின் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இதற்காக நான் மிகவும் பணிவாகவோ அல்லது மிகவும் சந்தேகமாகவோ ஒலிக்க விரும்பவில்லை. ஆனால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஏதாவது செய்யும் போது நீங்கள் செய்ய விரும்புவதில் சிறந்தவராக இருக்க விரும்புகிறீர்கள் அல்லவா? என்னைப் பொறுத்த வரை கபில் தேவ் இந்திய கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல இவ்வுலகமே கண்ட மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். எந்த குழந்தையும் இன்று பேட் மற்றும் பந்தை கையில் எடுக்கும் போது அவரை போன்ற உலகின் மிகச்சிறந்தவரை பார்த்து அவரைப் போல் வர வேண்டும் என்று நான் பரிந்துரைப்பேன்”

Ashwin

“அதே சமயம் கடந்த காலங்களில் யார் என்ன செய்திருந்தாலும் பரவாயில்லை நீங்கள் உங்களது முயற்சியில் உலகின் சிறந்தவராக வர வேண்டும் என்று நான் சொல்வேன். குறிப்பாக இந்தியாவுக்காக விளையாடும் போது உங்கள் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். அதே போல் நீங்களும் எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டும். ஆனால் அது உங்களை தாழ்த்துவதற்கு அனுமதிக்க கூடாது. உங்களுக்கு தெரியும் நானும் பெரிய தருணங்களிலும் அழுத்தமான தருணங்களிலும் விளையாடுகிறேன்”

இதையும் படிங்கIND vs SL : இரண்டாவது ஒருநாள் போட்டியில் யாரும் எதிர்பாக்காததை செய்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

“எனவே என்னை பொறுத்த வரை எந்த நேரத்திலும் எவ்வளவு பெரிய போட்டியாக இருந்தாலும் அதில் அதிக அழுத்தம் இருந்தால் நான் அதை மிகவும் ரசிக்கிறேன். எனவே நான் அழுத்தத்தை எதிர்நோக்குகிறேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல உலகிலேயே 5000+ டெஸ்ட் ரன்கள் மற்றும் 400+ விக்கெட்டுகளை எடுத்த ஒரே ஆல் ரவுண்டர் என்பது மட்டுமல்லாமல் கேப்டனாக 1983 உலக கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் முதன்மையானவர் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement