IND vs SL : இரண்டாவது ஒருநாள் போட்டியில் யாரும் எதிர்பாக்காததை செய்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohit-Sharma-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் விளையாடி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

INDvsSL

- Advertisement -

இவ்வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இலங்கை அணியும் விளையாடி வருவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Kuldeep Yadav 1

இந்நிலையில் இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ரோகித் சர்மா அதிரடியாக ஒரு மாற்றத்தை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் கடந்த போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

- Advertisement -

முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றதால் இந்த போட்டியில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா செய்த இந்த மாற்றமானது யாரும் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஃபிளாட்டான பிட்ச்சில் கத்துக்குட்டிகளை அடிக்கிறார் – விராட் கோலி விமர்சனங்களுக்கு சல்மான் பட் அதிரடி கருத்து

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) அக்சர் படேல், 8) முகமது ஷமி, 9) முகமது சிராஜ், 10) உம்ரான் மாலிக், 11) குல்தீப் யாதவ்.

Advertisement