ஃபிளாட்டான பிட்ச்சில் கத்துக்குட்டிகளை அடிக்கிறார் – விராட் கோலி விமர்சனங்களுக்கு சல்மான் பட் அதிரடி கருத்து

Butt-1
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஜனவரி 12ஆம் தேதியன்று கொல்கத்தாவில் நடைபெறும் வெற்றி பெற தீர்மானிக்கும் 2வது போட்டியிலும் என்று கோப்பையை கைப்பற்ற போராடவுள்ளது. முன்னதாக கௌகாத்தியில் நடைபெற்றது தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா 83, கில் 70 என தொடக்க வீரர்கள் அதிரடியான ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அப்படியே பயன்படுத்தும் வகையில் அடுத்ததாக களமிறங்கிய நம்பிக்கை நாயகன் விராட் கோலி சதமடித்து 113 ரன்கள் விளாசி இந்தியா 373 ரன்கள் குவிக்க உதவினார்.

Virat Kohli 113

பின்னர் 306 ரன்களுக்கு பந்து வீச்சில் இலங்கையை கட்டுப்படுத்தி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார். முன்னதாக அப்போட்டியில் சதமடித்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 45ஆவது சதத்தையும் ஒட்டுமொத்தமாக 73ஆவது சாதத்தையும் விளாசி நிறைய உலக சாதனைகளை படைத்தார். அதனால் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் உலக சாதனையை அவர் விரைவில் முறியடிப்பார் என்று நிறைய முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

சம்பவத்தை மறக்காதீங்க:
ஆனால் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்து வந்த கதைக்கு கடந்த வருடம் ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி கடந்த மாதம் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டிலும் சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பினார். தற்போது மீண்டும் இலங்கைக்கு எதிராக சதமடித்துள்ள அவர் ஃபார்முக்கு திரும்பிய பின் கடைசியாக அடித்த 3 சதங்களுமே ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக அதுவும் பிளாட்டான பிட்ச்சில் அடித்தார் என்று சமூக வலைதளங்களில் ஒரு தரப்பு கிண்டலையும் விமர்சனத்தையும் செய்து வருகிறது.

சொல்லப்போனால் அப்போது விட இப்போது நிறைய விதிமுறைகள் மாறிவிட்டதால் விராட் கோலியின் சதங்களை சச்சினுடன் ஒப்பிட முடியாது என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீரே விமர்சித்திருந்தார். இந்நிலையில் கத்துக்குட்டி என்று விமர்சகர்கள் கூறும் அதே ஆப்கானிஸ்தான் இலங்கை வங்கதேசத்துக்கு எதிராக சமீப காலங்களில் எத்தனை வீரர்கள் சதமடித்தார்கள் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய வரலாற்றின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் விராட் கோலி யார் என்பதை சொல்வதற்கு போதுமானது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையில் சதமடித்தார். ஆனால் ஆப்கானிஸ்தான் அணியில் வலுவான பந்து வீச்சு கூட்டணி இருந்தது. அதே சமயம் அவர்களுக்கு எதிராக சமீப காலங்களில் எத்தனை பேட்ஸ்மேன்கள் சதங்களை அடித்துள்ளார்கள். மேலும் விராட் கோலி சதமடிக்கும் போதெல்லாம் அவர் கத்துக்குட்டிகளுக்கு எதிராக அடிக்கிறார் என்றும் பிளாட்டான பிட்ச்சில் அடிக்கிறார் என்றும் சிலர் பேசுகிறார்கள். ஆனால் அவர் அதை 73 முறை செய்துள்ளார்”

Butt

“அதை அப்படி பேசுபவர்கள் செய்வார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் விராட் கோலி மிகப்பெரிய ஜீனியஸ் ஆவார். குறிப்பாக கடந்த டி20 உலக கோப்பில் விராட் கோலி விளையாடிய இன்னிங்ஸ் மிகவும் ஸ்பெஷலானது. அப்போட்டியில் அதுவும் நீங்கள் சுமாரான பார்மில் இருக்கும் போது அந்த விதத்தில் விளையாடுவது எளிதானதல்ல. அது போன்ற இன்னிங்ஸ் ஒரு வீரரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இனிமே இந்திய அணி அவர் இல்லாம விளையாட பழகிக்கனும் – ஆகாஷ் சோப்ரா அறிவுரை

அவர் கூறுவது போல சமீப காலங்களில் அதே ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக வேறு எந்த பேட்ஸ்மேன்களும் பெரிய அளவில் சதங்களை அடிக்கவில்லை. மேலும் வரலாற்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் ஏற்கனவே உலக தரமான பவுலர்களுக்கு எதிராக சதமடித்த விராட் கோலி தனது திறமையைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கூறலாம்.

Advertisement