இனிமே இந்திய அணி அவர் இல்லாம விளையாட பழகிக்கனும் – ஆகாஷ் சோப்ரா அறிவுரை

Aakash-Chopra
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறயிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போதே துவங்கி விட்டன. இந்த உலகக் கோப்பை தொடருக்காக தற்போது இந்திய அணி 20 வீரர்கள் கொண்ட பட்டியலை வகுத்து அந்த வீரர்களை வைத்து தற்போது ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கு எதிராக தற்போது இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

INDvsSL

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பலரும் இடம் பெற்று விளையாடி வருவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணியானது இன்று அந்த அணிக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டு மீண்டும் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார் .கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து காயம் காரணமாக எந்த வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் இருக்கும் பும்ரா காயம் முழுவதுமாக குணமடைந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றும் உலகக்கோப்பை அணியில் அவர் முக்கிய வீரராக திகழ்வார் என்பதனால் அவருடைய உடற்தகுதி குறித்த பல்வேறு விடயங்கள் தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

IND Japrit Bumrah

இந்திய அணியில் தற்போது முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் இடம் பிடித்து விளையாடி வந்தாலும் அவர்களை காட்டிலும் பும்ரா முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார். ஆனால் தொடர்ச்சியாக பும்ரா காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாதது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி பும்ரா இல்லாமல் விளையாட பழகிக் கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே பும்ரா இந்திய அணிக்காக விளையாடவில்லை. எனவே அவர் இல்லாமலும் இந்திய அணி விளையாடுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும். விளையாட்டின் போது இது போன்ற முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்படுவது என்பது சகஜமான ஒன்றுதான். எனவே அப்படி ஒரு வீரருக்கு காயம் ஏற்படும் போது அவரை மட்டுமே இந்திய அணி நம்பி இருக்கக் கூடாது. அவருக்கு பதிலாக தரமான வீரர்களை நாம் உருவாக்க வேண்டும். அந்த வகையில் இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடரில் சில புது வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து அவர்களையும் பலப்படுத்த வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : PAK vs NZ : ஒன்டே மேட்ச்ல டெஸ்ட் இன்னிங்ஸ் – எப்போ தான் மாறுவீங்க, பாபர் அசாமை கலாய்த்த சோயப் அக்தர், ரசிகர்கள்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடரில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட பும்ரா மீண்டும் நீக்கப்பட்டது இந்திய அணிக்கு நல்ல செய்தி கிடையாது. அதே வேளையில் உலக கோப்பைக்கு இந்திய அணி தயாராக வேண்டிய வேளையில் பும்ராவின் உடற்பகுதியும் கவனத்தில் வைத்து அவரை சரியான நேரத்தில் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement