PAK vs NZ : ஒன்டே மேட்ச்ல டெஸ்ட் இன்னிங்ஸ் – எப்போ தான் மாறுவீங்க, பாபர் அசாமை கலாய்த்த சோயப் அக்தர், ரசிகர்கள்

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் பாகிஸ்தான் முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை போராடி 0 – 0 என்ற கணக்கில் டிரா செய்து கோப்பையை பகிர்ந்து கொண்டது. முன்னதாக 2022ஆம் ஆண்டு ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை ஃபைனலில் தோல்வியை சந்தித்த அந்த அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடர்களிலும் சந்தித்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு இந்த ட்ரா ஓரளவு ஆறுதலாக இருந்தது. அந்த நிலைமையில் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பை தயாராகும் வகையில் அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது.

அதில் முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்ற நிலையில் முக்கியமான 2வது போட்டி ஜனவரி 11ஆம் தேதியன்று கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 49.5 ஓவரில் போராடி 261 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு ஃபின் ஆலன் 1 ரன்னில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 181 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய டேவோன் கான்வே சதமடித்து 101 (92) விளாசி ஆட்டமிந்தார்.

- Advertisement -

டெஸ்ட் இன்னிங்ஸ்:
அவருடன் அசத்திய கேப்டன் கேன் வில்லியம்சன் 85 (100) ரன்கள் குவித்து அவுட்டான நிலையில் அடுத்து வந்த டார்ல் மிட்சேல் 2, டாம் லாதம் 2, கிளன் பிலிப்ஸ் 3, ப்ரெஸ்வெல் 8 என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 262 ரன்களை துரத்திய பாகிஸ்தான் எளிதில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பக்கார் ஜமான் 0, இமாம்-உல்-ஹக் 6 என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 9/2 என திண்டாடிய அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற முயன்ற முகமது ரிஸ்வான் 28 (50) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய நியூசிலாந்து அடுத்து வந்த சோஹைல் 10, சல்மான் 25, முகமத் நவாஸ் 3, உஷாமா மிர் 12 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்து வெற்றிக்கு போராடியது. ஆனாலும் மற்றொருபுறம் நங்கூரமாக நின்ற பாபர் அசாம் அரைசதம் கடந்து வெற்றிக்கு போராடியதால் தங்கள் அணி வெல்லும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் உறுதியாக நம்பிக்கொண்டிருந்தனர்.

- Advertisement -

குறிப்பாக 3வது ஓவரிலேயே களமிறங்கி 40 ஓவர்களுக்கு மேல் நங்கூரமாக நின்று நன்கு செட்டிலாகி 114 பந்துகளை எதிர்கொண்டு பிட்ச் மற்றும் எதிரணியின் பலம் பலவீனங்களை தெரிந்து கொண்ட அவர் கேப்டனாக வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால் கடைசி வரை அதிரடியை துவங்காமல் 50 ஓவர்கள் வரை நின்றும் பேட்டிங் செய்யாமல் சொதப்பிய அவர் 43வது ஓவரில் இஷ் சோதியின் சுழலில் சிக்கி ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகி சென்றார். அதனால் வெறும் 43 ஓவர்களிலேயே 182 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் 79 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

அந்தளவுக்கு ஆரம்பம் முதலே பந்து வீச்சில் கட்டுக்கோப்பாக செயல்பட்ட நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி மற்றும் இஷ் சோதி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் நியூசிலாந்து சமன் செய்துள்ள இத்தொடரின் கடைசி போட்டி ஜனவரி 13ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

இதையும் படிங்கஇப்போதைக்கு நான் இந்திய அணியில் விளையாடுறது பத்திலாம் யோசிக்கல. என் டார்கெட் இதுதான் – ப்ரித்வி ஷா கருத்து

இருப்பினும் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் பாபர் அசாம் இப்போட்டியில் நன்கு செட்டிலாகியும் கடைசி வரை அதிரடியை துவக்காமல் 69.30 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தடவலாகவே செயல்பட்டு கடைசி நேரத்தில் அவுட்டாகி பாகிஸ்தானின் தோல்வியை உறுதி செய்தது முன்னாள் வீரர் சோயப் அக்தர் உட்பட அந்நாட்டு ரசிகர்களையே ஏமாற்றமடைய வைத்தது. மறுபுறம் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தும் ஒருநாள் கிரிக்கெட்டில் இப்படி டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடினால் எப்படி ஜெயிக்க முடியும் என்று இதர ரசிகர்கள் வழக்கம் போல அவரை கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement