இப்போதைக்கு நான் இந்திய அணியில் விளையாடுறது பத்திலாம் யோசிக்கல. என் டார்கெட் இதுதான் – ப்ரித்வி ஷா கருத்து

- Advertisement -

இந்திய அணியின் இளம் துவக்க வீரரான ப்ரித்வி ஷா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்காக கேப்டனாக செயல்பட்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தவர். மிக இளம் வயதிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு தனது 19-வது வயதிலேயே இந்திய அணிக்காக அறிமுகமாகவும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி தனக்கு கிடைத்த அறிமுக டெஸ்ட் போட்டி வாய்ப்பிலேயே சதம் அடித்து அசத்திய பிரித்வி ஷா தவிர்க்க முடியாத வீரராக மாறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் தனது இடத்தை தவறவிட்டார்.

Shaw

- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய ப்ரித்வி ஷா இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள் 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி என மூன்று வகையான இந்திய அணியிலும் விளையாடி இருக்கிறார். இருப்பினும் அதிரடி வீரரான அவர் விரைவிலேயே ஆட்டம் இழந்து விடுகிறார் என்கிற காரணத்தை முன்வைத்து அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டனர். இந்நிலையில் மீண்டும் இந்திய அணிக்காக திரும்புவதற்காக தற்போது உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக ப்ரித்வி ஷா ரஞ்சிப் போட்டியில் மும்பை அணிக்காக 383 பந்துகளை சந்தித்து 49 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 379 ரன்கள் குவித்து ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இப்படி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள அவருக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

Shaw

ஏனெனில் டி20 கிரிக்கெட்டிற்கு சுப்மன் கில் செட்டாக மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ப்ரிதிவி ஷாவை டி20 அணியின் துவக்க வீரராகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக துவக்க வீரராகவும் களமிறக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவது குறித்த கருத்திற்கு பதில் அளித்த ப்ரித்வி ஷா கூறுகையில் : தற்போது நான் இந்திய அணியில் விளையாடுவது குறித்து எல்லாம் யோசிக்கவில்லை. என்னுடைய டார்கெட் ஒன்று மட்டும் தான். தற்போதைக்கு மும்பை அணிக்காக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரஞ்சி கோப்பையை கைப்பற்ற வேண்டும் அது மட்டுமே என் மனதில் உள்ளது என தெளிவான பதிலை அளித்துள்ளார்.

இதையும் படிங்க : முதல் தர கிரிக்கெட்டில் அதிவேகமாக முச்சதம் விளாசிய 5 இந்திய வீரர்களின் பட்டியல் – லிஸ்ட் இதோ

மேலும் இக்கட்டான சூழலில் தனக்கு ஆதரவு வழங்காத யார் குறித்தும் நான் யோசிக்க போவதில்லை என்றும் இந்திய அணியின் தேர்வுக்குழுவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement