முதல் தர கிரிக்கெட்டில் அதிவேகமாக முச்சதம் விளாசிய 5 இந்திய வீரர்களின் பட்டியல் – லிஸ்ட் இதோ

Sehwag
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் தங்களது அணியை வெற்றி பெற வைப்பதற்கு விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் சதமடிக்க வேண்டும் என்ற என்னத்துடன் களமிறங்குவார்கள். இருப்பினும் அதற்கு சவாலாக தங்களது திறமையை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை எடுத்து தங்கள் அணியை வெற்றி பெற வைப்பதற்காக பவுலர்கள் போராடுவார்கள். எனவே அவர்களை சமாளித்து சதமடிப்பது எளிதல்ல என்பதாலேயே பெரும்பாலான போட்டிகளில் பேட்ஸ்மேன்களால் சாதிக்க முடிவதில்லை. இருப்பினும் அதையும் தாண்டி மிகச் சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் சதமடித்து மேற்கொண்டு ஓயாமல் இரட்டை சதமடிப்பது மிகவும் சவாலான ஒன்றாகும்.

அதை வெற்றிகரமாக தொடும் பேட்ஸ்மேன்கள் நன்கு செட்டிலாகி பிட்ச் எப்படி உள்ளது, எதிரணி பவுலர்கள் எப்படி பந்து வீசுகிறார்கள் என்ற அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு முச்சதம் அடிப்பது எளிது என்றாலும் அதற்கு நீண்ட நேரம் விளையாட உடல் ஒத்துழைக்க வேண்டும். எனவே நல்ல உடல் தகுதியுடன் அதையும் சாதிக்கும் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வேகமாக முச்சதத்தை விளாசுவதற்கு தனித்துவமான திறமை அவசியமாகும். அந்த வகையில் டெஸ்ட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் அதிவேகமாக முச்சதம் அடித்த 5 இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. ரிஷப் பண்ட் 320: கடந்த 2016/17 ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்காக மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி பவுலர்களை வெளுத்து வாங்கிய ரிஷப் பண்ட் 320 பந்துகளில் முச்சதம் விளாசி அசத்தினார்.

தொடர்ந்து அசத்திய அவர் 42 பவுண்டரி 9 சிக்ஸருடன் 308 (326) ரன்கள் விளாசி ஒரு வழியாக அவுட்டான நிலையில் இறுதியில் அப்போட்டி டிராவில் முடிந்தது. இருப்பினும் அந்த இன்னிங்ஸ் அடுத்த வருடமே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமாக அவருக்கு உதவியது.

- Advertisement -

4. ரோஹித் சர்மா 312: கடந்த 2009/10 ரஞ்சி கோப்பையில் குஜராத்துக்கு எதிராக பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு 5வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக நின்று நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 458 நிமிடங்கள் ஓயாமல் களத்தில் பேட்டிங் செய்து 312 பந்துகளில் முச்சதம் விளாசினார்.

தொடர்ந்து அசத்திய அவர் 38 பவுண்டரிகள் 4 சிக்ஸருடன் 309 (322) ரன்களை விளாசி மும்பை 648/6 ரன்கள் குவிக்க உதவியினார். இறுதியில் அப்போட்டி டிராவில் முடிந்தாலும் 2013இல் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்று கேப்டனாகும் அளவுக்கு அந்த இன்னிங்ஸ் ரோகித் சர்மாவின் கேரியரில் அடித்தளமாக அமைந்தது.

- Advertisement -

3. புனித் பிஸ்த் 291: கடந்த 2018 – 19 ரஞ்சி கோப்பையில் சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில் மேகலாயா அணிக்காக விக்கெட் கீப்பராக 4வது இடத்தில் களமிறங்கி ஒருநாள் கிரிக்கெட் போல வெளுத்து வாங்கிய இவர் 291 பந்துகளிலேயே முச்சததை விளாசி அசத்தல் சாதனை படைத்தார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த அவர் 53 பவுண்டரி 1 சிக்ஸருடன் 343 (332) ரன்கள் விளாசி தனது அணி 826/7 ரன்கள் குவிக்க உதவியும் இறுதியில் அப்போட்டி ட்ராவில் முடிந்தது.

- Advertisement -

2. கேதர் ஜாதவ் 285: இது ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளாகி நிற்கும் இவர் ஒரு காலத்தில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக 2019 உலகக்கோப்பையிலும் விளையாடினார்.

அதற்கு முன்பாக கடந்த 2012ஆம் ஆண்டு புனேவில் உத்தர பிரதேசத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக 4வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய அவர் 285 பந்துகளிலேயே முச்சதம் அடித்தார். தொடர்ந்து அசத்திய அவர் 54 பவுண்டரிகள் 2 சிக்ஸருடன் 327 (312) ரன்களை விளாசினாலும் இறுதியில் அப்போட்டி டிராவல் முடிந்தது.

1. வீரேந்திர் சேவாக் 278: கடந்த 2008ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா ஹாசிம் அம்லா 159 ரன்கள் உதவியுடன் 540 ரன்கள் குவித்தது. அதை தொடர்ந்து அழுத்தத்தில் களமிறங்கிய இந்தியாவுக்கு அசால்டாக அதிரடியாக வெளுத்து வாங்கி வெறும் 194 பந்துகளில் இரட்டை சதமடித்த வீரேந்தர் சேவாக் தொடர்ந்து ஓயாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 இன்னிங்ஸ் விளையாடி 278 பந்துகளில் தன்னுடைய 2வது முச்சதம் அடித்து மிரட்டினார்.

இதையும் படிங்க: IND vs SL : 2 ஆவது ஒருநாள் போட்டிக்கான அணியில் மாற்றங்கள் இருக்குமா? – பிளேயிங் லெவன் லிஸ்ட் இதோ

அதன் வாயிலாக முதல் தரம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக முச்சதம் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்றை படைத்த அவர் 42 பவுண்டரி 5 சிக்ருடன் 319 (304) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் 627 ரன்கள் குவித்த இந்தியா இறுதியில் கெத்தாக அப்போட்டியை ட்ரா செய்தது. இப்பட்டியலில் அனைவரும் உள்ளூர் அளவில் அடித்துள்ள நிலையில் சேவாக் மட்டும் சர்வதேச அரங்கில் அடித்துள்ளது அவருடைய திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.

Advertisement