IND vs SL : 2 ஆவது ஒருநாள் போட்டிக்கான அணியில் மாற்றங்கள் இருக்குமா? – பிளேயிங் லெவன் லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 67 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வி கண்டது.

INDvsSL

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியானது இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் ஜனவரி 12-ஆம் தேதி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே வேளையில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்ய இலங்கை அணியும் முனைப்பு காட்டுகிறது. இதன் காரணமாக இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஆனால் இன்றைய போட்டிக்கான அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் நாம் எதிர்பார்க்க முடியாது என்று நம்பலாம்.

- Advertisement -

ஏனென்று கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டதால் எந்த ஒரு மாற்றமும் இன்றி அதே வீரர்களே இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான அணியிலும் இடம் பெறுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அதன்படி இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : உலக கிரிக்கெட்டுக்கே நன்மை செய்த அவர் விளையாடும் போது நான் பிறக்கவே இல்ல – சச்சினின் ரசிகனாக பேசிய ஜோ ரூட்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) அக்சர் படேல், 8) முகமது ஷமி, 9) முகமது சிராஜ், 10) உம்ரான் மாலிக், 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement