உலக கிரிக்கெட்டுக்கே நன்மை செய்த அவர் விளையாடும் போது நான் பிறக்கவே இல்ல – சச்சினின் ரசிகனாக பேசிய ஜோ ரூட்

SAchin Tendulkar Joe Root
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 16 வயது பிஞ்சு கால்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற தரமான பவுலர்களை எதிர்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நாளடைவில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். குறிப்பாக 90களில் அவர் அடித்தால் தான் இந்தியா வெல்லும் என்ற நிலைமையில் பெரும்பாலான போட்டிகளில் ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றிய அவர் 24 வருடங்களாக இந்திய பேட்டிங் துறையை தன் தோள் மீது சுமந்து 2011 உலகக்கோப்பை உட்பட ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

Sachin 1

- Advertisement -

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் குதிரை கொம்பாக கருதப்பட்ட இரட்டை சதத்தை முதல் முறையாக அடித்து 1 சதம் அடிப்பதற்கே திண்டாடும் வீரர்களுக்கு மத்தியில் 100 சதங்களை விளாசிய அவர் ஏராளமான உலக சாதனைகளை படைத்துள்ளதால் இந்தியாவில் கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அப்படிப்பட்ட அவரை ஜாம்பவான்களாக போற்றப்படும் எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோர் முதல் ஏராளமான இளம் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வரை தங்களது ரோல் மாடலாக பின்பற்றி வருகிறார்கள்.

நானே ரசிகன் தான்:
அந்த வகையில் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் தாம் பிறக்காத காலத்திலேயே அறிமுகமாகி தாம் விளையாடிய காலத்திலும் எதிரணியில் விளையாடும் அளவுக்கு 20 வருடங்களுக்கு மேலாக காலத்தை கடந்து விளையாடிய சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிள்ளதாக மனதார பாராட்டியுள்ளார். கடந்த 2012இல் அறிமுகமாகி இங்கிலாந்தின் நம்பிக்கை நாயகனாக அவதரித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை அதிவேகமாக அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை ஜோ ரூட் ஏற்கனவே தகர்த்துள்ளார்.

Joe Root Sachin Tendulkar

மேலும் 15921 ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையும் தகர்க்கக் கூடிய ஒரே வீரர் என்று கருதப்படும் ஜோ ரூட் தற்போது துபாயில் நடைபெறும் ஐஎல் டி20 தொடரில் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரை தமக்கு மிகவும் பிடிக்கும் என அத்தொடரில் அவர் கொடுத்த பிரத்தியேக பேட்டியில் பேசியது பின்வருமாறு. “தற்போது சில அற்புதமான வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். ஆனால் அப்போதே சச்சின் சாதித்ததைப் பாருங்கள்”

- Advertisement -

“அது உண்மையில் குறிப்பிடத்தக்கது. அவ்வளவு இளம் வயதிலேயே அறிமுகமாகி நீண்ட வருடங்கள் சிறப்பாக செயல்பட்டு அதை அவர் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது அபாரமானது. அத்தோடு இருக்காமல் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னுடைய விளையாட்டில் தேவையான முன்னேற்றங்களையும் அவர் செய்தார். மேலும் அழுத்தத்தின் பாரத்தை அவர் தன் தோளில் சுமந்த நேரங்களும் உண்டு. அதை அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செய்தார். அதை விட நான் பிறப்பதற்கு முன்பாகவே அறிமுகமாகி விளையாடிய அவர் நான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பின்பும் விளையாடினார்”

Root

“அது இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் எந்தளவுக்கு எவ்வளவு காலம் எப்படி சிறப்பாக பங்காற்றினார் என்பதை காட்டுகிறது. அந்த வகையில் அவர் கிரிக்கெட்டில் உங்களுக்கு தெரிந்த மேலும் சில வீரர்களை போல மிகச் சிறந்தவர். நான் சிறுவனாக இருந்த போதே அவரை மிகவும் ரசித்தேன். அவர் விளையாடிய விதம் மிகவும் எளிதாக இருந்தது. இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல மொத்த உலக கிரிக்கெட்டுக்கும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். எனவே ஆம் ஒரு குழந்தையாக நான் வளரும் போது நிச்சயமாக எனக்கும் அவர் ஒரு தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தினார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: உங்களால தான் விராட் கோலி சதமடிச்சுட்டாரு, நீங்க அதை தவற விட்டுடிங்க – ரோஹித்தை விளாசிய கம்பீர் – காரணம் என்ன

அப்படி சச்சினை பார்த்து வளர்ந்த ஜோ ரூட் எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி இரட்டை சதமடித்த அவர் உலகிலேயே தங்களுடைய 100வது போட்டியில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement