காலத்துக்கும் அவங்க இந்தியாவுக்கு விளையாட முடியாது.. கழற்றி விட நேரம் வந்தாச்சு.. கங்குலி கருத்து

Sourav Ganguly 3
- Advertisement -

ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு தென்னாப்பிரிக்காவுக்கு பறக்கும் இந்தியா அங்கு 3 ஒருநாள் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. அதற்காக தனித்தனியாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய அணிகளில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வெடுக்கும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடுகின்றனர்.

அதை விட ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில் நட்சத்திர சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் கழற்றி விடப்பட்டு ருதுராஜ், கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் முக்கிய வீரர்களாக நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அந்த சீனியர்கள் 2021க்குப்பின் ஃபார்மை இழந்து தடுமாறியதால் அதிரடியாக நீக்கப்பட்டார்கள்.

- Advertisement -

காலம் கடந்தாச்சு:
அதில் புஜாரா கவுண்டி தொடரில் சிறப்பாக விளையாடிய கம்பேக் கொடுத்த நிலைமையில் ரகானே ஐபிஎல் மற்றும் ரஞ்சி கோப்பையில் போராடி மீண்டும் இந்திய அணிக்குள் வந்தார். அதனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தங்களுடைய அனுபவத்தை காட்டி இந்தியாவை காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர்களில் புஜாரா மோசமாக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

இருப்பினும் ஃபைனலில் நன்றாக விளையாடிய ரகானே அதன் பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சுமாராக செயல்பட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அந்த இருவரையுமே தற்போது தேர்வுக் குழு அதிரடியாக கழற்றி விட்டுள்ளது. மேலும் 2வது முறையாக தற்போது கழற்றி விடப்பட்டுள்ளதால் அவர்களின் கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் காலத்திற்கும் விளையாட முடியாது என்பதால் இந்த முடிவு மிகவும் சரியானது என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு கட்டத்தில் உங்களிடம் புதிய திறமைகள் இருக்கும். எனவே ஏராளமான திறமைகள் கொண்ட இந்தியா அதை பயன்படுத்துவதற்கான செயலில் இருக்க வேண்டும். புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் இந்தியாவுக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தனர். இருப்பினும் விளையாட்டு எப்போதும் உங்களிடம் ஒரே மாதிரியாக இருக்காது”

இதையும் படிங்க: உங்களுக்கு ரொம்ப தான் தைரியம்.. கேதார் ஜாதவ் பதிவிட்ட ஏலத்தொகை – ரசிகர்களை கிண்டல்

“நீங்கள் இந்திய அணியில் காலத்திற்கும் இருக்க முடியாது. இப்படி அனைத்து வீரர்களுக்குமே நடைபெறுவது சகஜமாகும். இந்திய கிரிக்கெட்டுக்காக ஆற்றிய பணிக்கு அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது தேர்வு குழுவினர் புது முகங்களை விரும்புகின்றனர். எனவே இது தான் அடுத்த வழியாகும்” என்று கூறினார்.

Advertisement