உங்களுக்கு ரொம்ப தான் தைரியம்.. கேதார் ஜாதவ் பதிவிட்ட ஏலத்தொகை – ரசிகர்களை கிண்டல்

Kedar-Jadhav
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்த ஆண்டு 2024-இல் பதினேழாவது ஐபிஎல் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் வீரர்களின் மினி ஏலமானது நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதாக நவம்பர் 26-ம் தேதியே அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டனர். அதோடு அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டனர்.

- Advertisement -

மேலும் சில வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்யப்பட்டுள்ள வேளையில் மீதமுள்ள வீரர்கள் அனைவரும் தற்போது ஐபிஎல் ஏலத்திற்கான பட்டியலில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் வீரர்கள் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக தங்களது பெயர்களை பதிவு செய்துள்ள வேளையில் 38 வயதான இந்திய வீரர் கேதர் ஜாதவ் தனது பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவிட்டுள்ளது தான் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் சற்று கிண்டல் செய்யப்படும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே அவர் மீது ரன் அடிக்க முடியாத வீரர் என்ற பெயர் இருந்து வரும் வேளையில் 2021 ஆண்டிற்கு பின்னர் அவரை எந்த ஒரு அணியும் ஏலத்தில் எடுக்க விருப்பம் காட்டுவதில்லை. இருப்பினும் எப்படியோ கடந்த ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மாற்று வீரராக இடம்பிடித்த அவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தார்.

இதையும் படிங்க : உள்ளூரிலேயே திறமை இருக்கு.. இந்திய அணிக்கு அவங்க தேவையில்லை.. கம்பீர் அதிரடி கருத்து

இந்நிலையில் தற்போது 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலத்தில் தனது பெயரை 2 கோடிக்கு அவர் பதிவு செய்துள்ளது தான் அனைவரது மத்தியிலும் கிண்டல் செய்யும் விதமாக மாறியுள்ளது. ஏனெனில் நட்சத்திர வீரர்கள் பலரும் தங்களது அடிப்படை விலையை குறைத்துள்ள வேளையில் எந்த ஒரு அணியும் வாங்க ஆர்வம் காட்டாமல் இருக்கும் வீரரான இவர் தைரியமாக 2 கோடி ரூபாயை தனது அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கிண்டல் செய்யப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement