உள்ளூரிலேயே திறமை இருக்கு.. இந்திய அணிக்கு அவங்க தேவையில்லை.. கம்பீர் அதிரடி கருத்து

Gautam Gambhir 9
- Advertisement -

கோலாகலமாக நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மறக்க முடியாத சோகமாக அமைந்தது. அதிலும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் தோல்வியை சந்தித்து கண்கலங்கி நின்றது அனைவருக்கும் மறக்க முடியாத வேதனையாக அமைந்தது.

அதே போல ஜாம்பவானாக போற்றப்படும் ராகுல் ட்ராவிட் 2003இல் ஒரு வீரராகவும் 2007இல் ஒரு கேப்டனாகவும் சந்தித்த அதே தோல்வியை 2023 உலகக் கோப்பையில் ஒரு பயிற்சியாளராக சந்தித்து ஏமாற்றுத்துடன் விடை பெறுவதற்கு தயாரானார். ஏனெனில் 2021இல் பொறுப்பேற்ற அவருடைய பதவி காலம் இந்த உலகக் கோப்பையுடன் நிறைவடைந்ததால் வேறு பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

வெளிநாடு வேண்டாம்:
இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பை வரை மீண்டும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளார். சொல்லப்போனால் கடைசியாக 2013இல் இருந்த டங்கன் ஃபிளட்சரை தொடர்ந்து கடந்த 10 வருடங்களாக ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற இந்தியர்கள் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் உள்ளூரில் நிறைய திறமை கொண்ட முன்னாள் வீரர்கள் இருப்பதால் இந்திய அணிக்கு வெளிநாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் தேவையில்லை என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த உலகக் கோப்பையில் இந்தியா எந்தளவுக்கு சிறப்பாக விளையாடியது என்பதை பார்த்தோம். அது நமக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தேவையில்லை என்பதை காட்டியது”

- Advertisement -

“லேப்டாப் பயன்படுத்தாமல் அல்லது சரியாக ஆங்கிலம் பேசாமல் இருப்பதே நமது நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர்களின் ஒரு பிரச்சினையாகும். நம்மிடம் கார்ப்பரேட் திறமைகள் இல்லை. ஆனால் களத்தில் இறங்கி கடுமையாக உழைத்து எப்படி வெற்றிக்கான முடியும் என்பது நமக்கு தெரியும். நம்மிடம் உலகக் கோப்பை வென்ற நிறைய மகத்தான முன்னாள் வீரர்கள் இருக்கின்றனர்”

இதையும் படிங்க: சச்சின் இல்ல.. அவர் தான் வரலாற்றின் மகத்தான இந்திய பேட்ஸ்மேன்.. பாக் வீரர் பேட்டி

“எனவே அவர்கள் அணியை வழி நடத்துவதற்கு விரும்பினால் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் வெளிநாட்டவர்களுக்கு பதிலாக அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். விளையாட்டில் எப்போதுமே உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும். ஏனெனில் நீங்கள் ஜெர்சியை அணிந்ததும் கடினமாக வியர்வை சிந்தி அந்த உயரத்தை எட்டுவீர்கள். ஒருவேளை ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தொடராமல் போனாலும் ஏதேனும் ஒரு இந்தியர் அவருடைய வேலையை செய்ய வந்திருப்பார் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement