சச்சின் இல்ல.. அவர் தான் வரலாற்றின் மகத்தான இந்திய பேட்ஸ்மேன்.. பாக் வீரர் பேட்டி

junaid khan
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ரசிகர்களுக்கே அப்படி என்றால் இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடி தோல்வியை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களத்திலேயே நெஞ்சம் உடைந்து கண்கலங்கி நின்றார்கள்.

இருப்பினும் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெறும் அளவுக்கு மொத்தம் 765 ரன்கள் குவித்த விராட் கோலி ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்த அவர் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

சிறந்த பேட்ஸ்மேன்:
அவருக்கு நிகராக தன்னுடைய சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் பெரும்பாலான போட்டிகளில் அடித்து நொறுக்கிய ரோகித் சர்மா அபாரமான துவக்கத்தை கொடுத்து அடுத்தடுத்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். மேலும் தன்னுடைய கேரியரில் மொத்தமாக 7 சதங்கள் அடித்துள்ள அவர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (6) மாபெரும் உலக சாதனையை உடைத்தார்.

அந்த வகையில் நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே இந்தியாவின் மகத்தான வீரர்களாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரை விட ரோகித் சர்மா தான் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் வீரர் ஜுனாய்ட் கான் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோரில் சிறந்தவர் யார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் ரோகித் சர்மா என்று நினைக்கிறேன். அவர் பேட்டிங் செய்யும் விதம் அபாரமாக இருக்கிறது. அனைத்து விதமான ஷாட்டுகளையும் கொண்டுள்ள காரணத்தாலேயே அவரை ஹிட்மேன் என்று அனைவரும் அழைக்கிறோம்”

இதையும் படிங்க: பிரசித், அர்ஷிதீப் இருந்தாலும் அவர தெ.ஆ தொடரில் மறந்துருக்க கூடாது.. நெஹ்ரா ஆதங்கம்

“குறிப்பாக ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. அத்துடன் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார். எனவே என்னை பொறுத்த வரை அவர் தான் சிறந்த வீரர்” என்று கூறினார். முன்னதாக ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டிலும் உலகக்கோப்பையிலும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற அடுத்தடுத்த உலக சாதனைகளையும் ரோஹித் சர்மா சமீபத்தில் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement