பிரசித், அர்ஷிதீப் இருந்தாலும் அவர தெ.ஆ தொடரில் மறந்துருக்க கூடாது.. நெஹ்ரா ஆதங்கம்

Ashish Nehra 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த பெரிய தொடர்களில் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதற்காக அறிவிக்கப்பட்ட 3 விதமான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாட உள்ளனர். மேலும் சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள டி20 தொடரில் சீனியர் வீரர்கள் கழற்றி விடப்பட்டு ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் போன்ற நிறைய இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

மொத்தமா மறக்காதீங்க:
இந்த நிலைமையில் தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் சீனியர் புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டுமென ஆசிஸ் நெஹ்ரா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“தேர்வுக் குழுவினர் வெவ்வேறு அணிகளை தேர்வு செய்ததில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அதில் கிட்டத்தட்ட அனைத்து வீரர்களின் பெயர்களும் இருக்கிறது. இருப்பினும் இத்தொடரில் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் புவனேஸ்வர் குமார் தென்னாப்பிரிக்காவுக்காக செல்லும் இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்”

- Advertisement -

“உங்களிடம் அர்ஷிதீப் சிங், முகேஷ் குமார் போன்ற புதிய பந்தில் அசத்தும் பவுலர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அந்த அனைத்து பவுலர்களையும் விட அவர் மிகவும் அனுபவம் மிகுந்தவர் என்று நான் சொல்வேன். அதனால் தேர்வுக் குழுவினர் அவர் மீது கண் வைத்திருக்க வேண்டும். இப்படி மொத்தமாக அவரை மறந்திருக்கக் கூடாது. குறிப்பாக 20 ஓவர் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் அவர் இன்னும் விளையாடுவதற்கு தகுதியுடையவர்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அடுத்த உலகக் கோப்பையில் அவர் சாம்பியனா கேரியரை முடிப்பாரு.. கங்குலி நம்பிக்கை

அவர் கூறுவது போல ரன்களை வள்ளலாக வாரி வழங்கும் பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் போன்றவர்களை விட புவனேஸ்வர் குமார் மிகுந்த அனுபவமிக்கவராக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் 2022 டி20 உலகக் கோப்பையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதன் காரணமாக அவரை கழற்றி விட்டு இளம் வீரர்களை நோக்கி பிசிசிஐ நகர்ந்துள்ளது. அதனால் மீண்டும் அவர் இந்திய அணியில் விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement