அடுத்த உலகக் கோப்பையில் அவர் சாம்பியனா கேரியரை முடிப்பாரு.. கங்குலி நம்பிக்கை

Sourav Ganguly 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று எதிரணிகளை தெறிக்க விட்ட இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை நழுவ விட்டது கோடி கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அபாரமாக விளையாடியும் கடைசியில் கோப்பையை வெல்ல முடியாததால் களத்திலேயே கண்கலங்கி நின்றனர்.

அதே போலவே பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் 2003இல் ஒரு வீரராக தோல்வியை சந்தித்து 2007இல் ஒரு கேப்டனாக தோல்வியை சந்தித்ததை போல தற்போது ஒரு பயிற்சியாளராக கூட உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2021இல் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவருடைய பதவி காலம் 2023 உலகக் கோப்பையுடன் நிறைவு பெற்றது.

- Advertisement -

கங்குலி நம்பிக்கை:
இருப்பினும் 2022 டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஆகிய அடுத்தடுத்த தொடர்களில் நாக் அவுட் வரை சென்று இந்தியா ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் ராகுல் டிராவிட் மீண்டும் பயிற்சியாளராக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதே சமயம் அவருடைய பதவி காலம் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் குறைந்தபட்சம் 2024 டி20 உலகக் கோப்பை வரை டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தாம் பிசிசிஐ தலைவராக இருந்த போது நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட் 2024 டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்று சாம்பியனாக விடைபெறுவார் என்று நம்புவதாக சௌரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “டிராவிட் மீது அவர்கள் மீண்டும் நம்பிக்கையை காட்டியுள்ளது எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை”

- Advertisement -

“நான் பிசிசிஐ தலைவராக இருந்த போது அவரை இந்த வேலையை செய்வதற்கு பேசி சம்மதிக்க வைக்க வைத்தேன். தற்போது அவருடைய பதவி காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதை பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. வரும் ஜூன் மாதம் நடைபெறும் மற்றுமொரு உலகக் கோப்பையை வெல்ல அவருக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். இம்முறை அவர் உலகக் கோப்பையை மிகவும் நெருங்கி வந்தார்”

இதையும் படிங்க: உண்மையாவே அந்த ஜாம்பவானோட கம்பேர் செஞ்சு பாராட்ட சூர்யகுமார் தகுதியானவர் தான்.. ஜஹீர் கான் கருத்து

“அவர்கள் இந்த உலகக் கோப்பையை வெல்லாமல் போயிருக்கலாம். ஆனால் இத்தொடரில் இந்தியா மிகச் சிறந்த அணியாக விளையாடியது. இந்த நிலைமையில் அடுத்த 7 மாதங்களில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மீண்டும் உலக கோப்பை நடைபெறுகிறது. அதில் ரன்னராக இல்லாமல் டிராவிட் சாம்பியனாக இருப்பார் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement