- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலி, ஜெய்ஸ்வால் தவிர யார்கிட்டயும் 40 இல்ல.. இங்கிலாந்தில் வெல்ல இந்தியா இதை செய்யனும்.. கங்குலி கவலை

இந்திய கிரிக்கெட் அணி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்று அசத்தியது. அதற்கு முன்பாக 2024 டி20 உலகக் கோப்பையையும் வென்று இந்தியா சாதனை படைத்தது. ஆனால் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா வரலாறு காணாத ஒயிட் பாஸ் தோல்வியை பதிவு செய்து அவமானத்தை சந்தித்தது.

அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் சுமாராக விளையாடிய இந்தியா 3 – 1 (5) என்ற கணக்கில் தோற்றது. அதனால் 10 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவிடம் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா கோட்டை விட்டது.

- Advertisement -

கங்குலி அதிருப்தி:

மேலும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெற முடியாமல் இந்தியா வெளியேறியது. இந்நிலையில் இந்தியாவின் இந்த வீழ்ச்சிக்கு பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடுவதே காரணம் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அதிருப்தியை தெரிவித்துள்ளார். குறிப்பாக வெளிநாட்டில் விராட் கோலி, ஜெய்ஸ்வால் தவிர்த்து யாருமே 40க்கும் மேற்பட்ட சராசரியை கொண்டிருக்கவில்லை என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

எனவே வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக விளையாடி பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி கங்குலி பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் தோட்டாவை கடித்து விட்டு பந்தை சுழற்றி அடிக்கிறார். ஆனால் அனைத்து நேரங்களிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் அப்படி விளையாடி ரன்கள் குவிக்க முடியாது”

- Advertisement -

கங்குலி அறிவுரை:

“டெஸ்ட் கிரிக்கெட் என்பது மனநிலை, உறுதிப்பாடு மற்றும் மன உறுதி ஆகியவற்றைப் பொறுத்தது. அதில் விராட் கோலி சிறந்தவர். அவர் இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகளில் சொதப்புவதை நான் பார்க்கப் போவதில்லை. ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், கில், ராகுல் ஆகியோர் முன்னே வந்து அசத்த வேண்டும். என்னுடைய ஒரே கவலை என்னவெனில் வெளிநாட்டு மண்ணில் ஜெய்ஸ்வால், கோலி மட்டுமே 40+ பேட்டிங் சராசரி கொண்டுள்ளனர்”

இதையும் படிங்க: கிட்டத்தட்ட க்ளோசா வந்துட்டேன்.. ஆனா இன்னும் உறுதியாகல.. இந்திய அணியில் தனது வாய்ப்பு குறித்து – கருண் நாயர் கருத்து

“நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல அணியாக இருக்க வேண்டுமெனில் டாப் 6 பேட்ஸ்மேன்களில் குறைந்தது 3 – 4 பேர் 50க்கும் நெருக்கமான பேட்டிங் சராசரி கொண்டிருக்க வேண்டும். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் தொடரில் நமது ஆட்டத்தை மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் அங்கே நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -