இந்திய அணிக்காக கடந்த 2016-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான கருண் நாயர் இதுவரை இந்திய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிலும் குறிப்பாக 2016-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது முச்சதம் அடித்து கவனத்தை ஈர்த்திருந்த அவர் அடுத்த சில போட்டியிலேயே இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார்.
எனக்கான வாய்ப்பை நெருங்கி விட்டேன் : கருண் நாயர்
அதன் பின்னர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக இந்திய அணிக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் சேவாக்கிற்கு அடுத்து முச்சதத்தை அடித்த இரண்டாவது வீரராகவும் மாறினார். ஆனால் அதன்பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்காது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது.
ஆனாலும் மீண்டும் தான் எப்படியாவது இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று கருண் நாயர் கடுமையாக போராடி வருகிறார். அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டிகளில் எல்லாம் மலைபோல் ரன் குவித்து மிகச் சிறப்பான பார்மை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பையில் மட்டும் 7 போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதன் பின்னர் அவருக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் தேர்வுக்குழு அகார்கர் தற்போதைய இந்திய அணியில் அனைவருமே 40-க்கு மேற்கொண்ட சராசரியை கொண்டவர்கள் என்பதனால் கருண் நாயருக்கு வாய்ப்பு தர முடியாது என தெரிவித்திருந்தார். அதன் பின்னர் ரஞ்சி தொடரிலும் விதர்பா அணிக்காக நான்கு சதங்களை அடித்த அவர் 860 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
அதன் காரணமாக மீண்டும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆதரவு வலுத்து வந்தது. அதனால் ஜூன் மாதம் நடைபெறயிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் அவர் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
இதையும் படிங்க : 18 வருடம்.. நமக்காக அதை செய்யப்போகும் படிதாருக்கு இதை கொடுங்க.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கோலி கோரிக்கை
இந்திய அணியில் நான் மீண்டும் இடம்பெறும் வாய்ப்பை நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன். ஆனால் அந்த வாய்ப்பிற்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியவில்லை. மேலும் தற்போதைக்கு நான் ஐபிஎல் தொடரில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என கருண் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



