மேக்ஸ்வெல் இன்னிங்ஸ் ஆல் டைம் பெஸ்ட் கிடையாது.. அந்த 2 இந்தியர்களும் அசத்திருக்காங்க.. கங்குலி கருத்து

Sourav Ganguly Maxwell
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் லீக் சுற்று தேவையான வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் இடங்களை பிடித்து செமி ஃபைனல் சுற்றில் விளையாடுவதற்கு தயாராக இருக்கின்றன. முன்னதாக இத்தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கிளன் மேக்ஸ்வெல் விளையாடிய ஆட்டத்தை பார்த்து மொத்த உலகமும் வியந்து பாராட்டியது என்றே சொல்லலாம்.

ஏனெனில் மும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 292 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து 91/7 என தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் கேப்டன் கமின்ஸ் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றிய உதவியுடன் அதிரடியாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

கங்குலி மறுப்பு:
குறிப்பாக அதிக நேரமாக விளையாடியதால் காயத்தை சந்தித்து கால்களை நகர்த்த முடியாமல் தடுமாறியாமல் அதற்காக அசராமல் கைகளை பயன்படுத்தியே சுமாராக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் பவுலவர்களை அடித்து நொறுக்கி 201* (128) ரன்கள் விளாசி அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங் செய்கையில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த அவர் விளையாடிய இன்னிங்ஸ் தங்களுடைய வாழ்நாளில் பார்த்த மகத்தான இன்னிங்ஸ் என்று சச்சின் உட்பட பலரும் பாராட்டினர்.

இந்நிலையில் கிளன் மேக்ஸ்வெல் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார் என்றாலும் அதற்காக ஒட்டுமொத்த வரலாற்றின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடினார் என்று சொல்ல முடியாது என முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஏனெனில் சச்சின், விராட் கோலி போன்றவர்கள் இதே போன்ற சமயங்களில் காயத்துடன் சிறப்பாக விளையாடி சில வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் நிச்சயம் வென்றிருக்க வேண்டும். இருப்பினும் கிளன் மேக்ஸ்வெல் ஒரு கண்மூடித்தனமான இன்னிங்ஸ் விளையாடி வெற்றியை பறித்தார். அது அற்புதமான இன்னிங்ஸ். ஆனால் சிறப்பான பவுலிங் மற்றும் கேப்டன்ஷிப்புக்கு எதிராக அவர் அடிக்கவில்லை. எனவே கண்டிப்பாக அதை ஒருநாள் கிரிக்கெட்டின் மகத்தான இன்னிங்ஸ் என்று நான் மதிப்பிட மாட்டேன்”

இதையும் படிங்க: சத்தியமா சொல்றேன்.. இந்த ஒரு தடையை மட்டும் தாண்டிட்டா நாம வேர்லடுகப் ஜெயிக்குறது உறுதி – தினேஷ் கார்த்திக் பேட்டி

“ஏனெனில் இதற்கு முன் சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோரும் மகத்தான இன்னிங்ஸ் விளையாடியுள்ளனர். அப்போட்டியில் காயத்தை சந்தித்து ஓட முடியாமல் தவித்த அவர் 8வதாக விளையாடிய மற்றொரு வீரருடன் சேர்ந்து தொடர்ந்து சிக்சர்களை அடித்து அசத்தலாக விளையாடினார். ஆனால் விராட் மற்றும் சச்சினும் இதற்கு முன் சில மகத்தான இன்னிங்ஸ் விளையாடியுள்ளனர்” என்று கூறினார்.

Advertisement