சத்தியமா சொல்றேன்.. இந்த ஒரு தடையை மட்டும் தாண்டிட்டா நாம வேர்லடுகப் ஜெயிக்குறது உறுதி – தினேஷ் கார்த்திக் பேட்டி

Dinesh-Karthik
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு மத்தியில் இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரானது நவம்பர் 19-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முற்றிலுமாக முடிவடைந்த வேளையில் இன்னும் இந்த தொடரில் 3 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளது.

அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது அரையிறுதி போட்டி நாளை நவம்பர் 15-ஆம் தேதியும், அதன்பிறகு நவம்பர் 16-ஆம் தேதி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியும் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது கோப்பையை கைப்பற்று என்று பலரும் கூறி வரும் வேளையில் இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய அணி குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணி மட்டும் நியூசிலாந்து அணியை அரையிறுதியில் வீழ்த்தி விட்டால் அதன் பின்னர் தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா எந்த அணியாக இருந்தாலும் இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்வது உறுதி. எனவே இந்த அரையிறுதி என்கிற தடையை மட்டும் கடந்தால் இந்திய அணி கோப்பையை வென்று விடும் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அந்த அரையிறுதி போட்டி மிகப்பெரிய போட்டி. மும்பை வான்கடேவில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை அடித்தால் நிச்சயம் நம்மிடம் இருக்கும் பந்து வீச்சாளர்களை வைத்து அவர்களை சுருட்ட முடியும்.

இதையும் படிங்க : 6 மாசத்துக்கு முன்னாடி அவர் செஞ்சு கொடுத்ததை மறக்காதீங்க.. பாபர் அசாமுக்கு லெஜெண்ட் கபில் தேவ் ஆதரவு

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தான் சிறந்த பவுலிங் அட்டாக் கொண்ட அணி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். நிச்சயம் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement