கோப்பை வெல்ல அந்த 2 சவாலான டீமை சாய்க்கணும்.. இந்தியாவுக்கு பாராட்டுடன் கங்குலி எச்சரிக்கை

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் படித்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. குறிப்பாக வலுவான ஆஸ்திரேலியாவை முதல் போட்டியிலேயே 2/3 என சரிந்தும் தோற்கடித்த இந்தியா பரம எதிரி பாகிஸ்தானை தொடர்ந்து உலகக்கோப்பை 8வது முறையாக வீழ்த்தி சாதனை படைத்தது.

அதற்கிடையே கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தையும் எளிதாக வீழ்த்திய இந்தியா ஐசிசி தொடரில் 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக சவாலான நியூசிலாந்தையும் தோற்கடித்தது. அதே வேகத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை நிரூபித்து அபாரமாக செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

கங்குலி பாராட்டுடன் எச்சரிக்கை:
மேலும் தற்சமயத்தில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல், பும்ரா, ஷமி, குல்தீப் போன்ற பெரும்பாலான முக்கிய வீரர்கள் நல்ல ஃபார்மில் அசத்தி வருகிறார்கள். அதன் காரணமாக 2011 போல சொந்த மண்ணில் இம்முறை இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இந்த உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

எனவே கோப்பை என்பதை இன்னும் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கும் அவர் அதை வெல்வதற்கு இந்தியா அந்த 2 அணிகளை தோற்கடிப்பது அவசியம் என்று கூறியுள்ளார். மேலும் இங்கிலாந்து இப்படி மோசமாக விளையாடும் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவுக்கு இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மிகப்பெரிய சவாலை கொடுக்கும் அணிகளாக இருக்கும். குறிப்பாக ஆஸ்திரேலியா ஆரம்பகட்ட தோல்விகளிலிருந்து அபாரமாக கம்பேக் கொடுத்து நியூசிலாந்துக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்றனர். மறுபுறம் இங்கிலாந்து இவ்வளவு சுமாராக விளையாடும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இது தான் விளையாட்டாகும். இந்தியா தற்போது மிகவும் வலுவான அணியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது”

இதையும் படிங்க: தொடர்ந்து 3 ஆவது முறையாக பரிதாபத்தை சந்தித்த நடப்பு சாம்பியன் – ஹிஸ்டரில இப்படி நடந்ததே கிடையாது

“ஆனால் வெற்றி சாம்பியன்ஷிப் இன்னும் தூரத்தில் இருக்கிறது. எனவே அவர்கள் முதலில் நாக் அவுட் சுற்றைத் தாண்ட வேண்டும். மேலும் ஹர்திக் பாண்டியா காயத்தால் விலகியிருந்தாலும் இந்தியா இப்போது வலுவான அணியாகவே இருக்கிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்த ஆஸ்திரேலியா தற்போது டாப் 4 இடத்திற்குள் மாஸ் கம்பேக் கொடுத்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா அசால்ட்டாக 400 ரன்களை அடித்து எதிரணிகளை பந்தாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement