தொடர்ந்து 3 ஆவது முறையாக பரிதாபத்தை சந்தித்த நடப்பு சாம்பியன் – ஹிஸ்டரில இப்படி நடந்ததே கிடையாது

ENG
- Advertisement -

நடப்பு சாம்பியனாக இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணியானது இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளில் ஒன்றாகவும், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாகவும் பார்க்கப்பட்டது. ஏனெனில் அந்த அளவிற்கு இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பலம் வாய்ந்த வீரர்களாக காணப்பட்டனர். எனவே அவர்களது ஆதிக்கம் இந்து தொடரிலும் இருக்கும் என்று பலராலும் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அதன்பிறகு பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. பின்னர் தொடர்ச்சியாக வெற்றிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியானது ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை இன அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து முதல் 5 போட்டியிலேயே நான்கு தோல்விகளை பெற்று இருந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து அக்டோபர் 29-ஆம் தேதி நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற மிக முக்கியமான 29-ஆவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் அடித்தது.

அதனைதொடர்ந்த்து 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு சுருண்டு 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தற்போது இங்கிலாந்து அணி இந்து தொடரில் 6 போட்டிகளில் விளையாடி தங்களது ஐந்தாவது தோல்வியை பதிவு செய்து இந்த தொடரில் தற்போது புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தினை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த தோல்வியின் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு படுமோசமான சாதனைகளை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நடப்பு சாம்பியனாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற எந்த ஒரு அணியும் இதே போல் ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்து கிடையாது. ஆனால் இங்கிலாந்து அணி இப்படி ஐந்து தோல்விகளை சந்தித்து மோசமான நிலையை இந்த உலகக்கோப்பை தொடரில் மோசமான நிலையை சந்தித்துள்ளது. அதோடு இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 129 ரன்கள் மட்டுமே அடித்த இங்கிலாந்து அணி கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டியிலுமே 200 ரன்களை கூட தொடாமல் ஆல் அவுட்டாகி உள்ளது. குறிப்பாக இந்திய அணிக்கு முன்னதாக நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு சுருண்டது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் பவுலர்களை விட பெஸ்ட்.. என்னை விட கன்ட்ரோலில் கலக்குறாரு.. வாசிம் அக்ரம் பாராட்டு

அதேபோன்று இலங்கை அணிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 400 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய இங்கிலாந்து அணி 170 ரன்களிலேயே சுருண்டது. இப்படி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் அடுத்தடுத்து இங்கிலாந்து அணி 200 ரன்களுக்குள் சுருண்டு எந்த ஒரு உலகக் கோப்பை தொடரிலும் தோல்வியை சந்தித்ததே கிடையாது. ஆனால் இம்முறை அந்த மோசமான சாதனையை படைத்த இங்கிலாந்து அணி தற்போது கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது என்றே கூறலாம்.

Advertisement